அமைச்சர் செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை: சென்னையில் நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2018

அமைச்சர் செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை: சென்னையில் நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்


சென்னையில் 4 நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதி அளித்ததை தொடர்ந்து தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி சென்னையில் 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 4வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உணவு, குடிநீர் இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2009ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்த தொடக்ககல்வி ஆசிரியர்கள் 2000க்கும் மேற்பட்டோர் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

2009ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு பணிக்கு சேர்ந்தவர்களை விட அதற்கு பின்னர் சேர்ந்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை குறைவான சம்பளமே கிடைப்பதாக இடைநிலை ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரே கல்வி தகுதியுடன் ஒரே பணியை செய்து வரும் நிலையில் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

1 comment:

  1. TNTET - 2017
    பி.இராஜலிங்கம் புளியங்குடி அறிக்கை..

    கடந்த 23.04.2018 அன்று பள்ளிக்கல்வி துறை இணை இயக்குநர் பணியாளர் தொகுதி திரு அவர்களை டிபிஐ வளாகத்தில் அனைத்து தேர்வர்களும் சந்தித்து நம் நிலை குறித்து எடுத்துக்கூறினோம் அப்போது அவர்கள் கூறியதாவது

    *" ஆசிரியர் காலிப்பணியிடம் குறைவாகவே உள்ளன அதை நிரப்புவது குறித்து அரசு எங்களுக்கு எழுத்து பூர்வமான அறிக்கை கோரினால் உடனே காலிப்பணியிடம் குறித்து டிஆர்பிக்கு அனுப்புகிறோம் என்றும் அரசு நிரப்ப சொன்னால் உடனே தயார் எனவும் கூறினார்.*
    *மேலும் விரைவில் நல்லது நடக்கும் அதற்கான வேலைகள் நடக்கிறது என ஆறுதல் வார்த்தைகள் அளித்தார்*

    பிறகு நீண்ட நேர ஆர்பாட்டத்திற்கு பிறகு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் திருமதி ஜெயந்தி அவர்களை பார்க்க எங்களில் இருவருக்கு நேரம் தந்தனர்..

    அவர்கள் மற்றும் கூறியதாவது..

    *நான் : மேடம் இதுவரையில் ஜெகந்நாதன் சார் முதல் நான்கு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம்..*

    *டிஆர்பி பதில் : விரைவில் சான்றிதழ் மற்றும் தாள் 1 சரிபார்ப்பு நடத்துகிறோம்*

    *நான் : இதைத்தான் முன்னாள் தலைவர் திரு நந்தகுமார் அவர்கள் இரண்டு மாதத்தில் நல்லது செய்கிறோம் என கூறினார்கள் ஆனா அதற்குள் அவர் மாற்றப்பட்டு விட்டார்*

    *டிஆர்பி பதில் : உங்களுக்கு விரைவில் நல்லது நடக்கும் (உறுதியாக)*

    *நான் : அடுத்த டெட் வந்தால் எங்கள் நிலை பரிதாபம் மேடம் (கண்ணீரோடு) டிஆர்பி பதில்: தேர்ச்சி பெற்றவர்களை வெய்ட்டேஜ் முறைப்ஓடி பணிநியமனம் நடந்த பிறகு தான் அடுத்த டெட் என் உறுதியளிதார்கள்..*

    *நான் : இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தனியார் பள்ளியிலும் புறக்கணிக்கப்பட்டு வாழ்வாதார இழந்துள்ளோம் நீங்களாவது நல்லது செய்யுங்கள் மேடம்*
    *டிஆர்பி பதில் : அறிக்கை வந்ததும் பட்டியல் வெளியிடுகிறோம் என்றும் இது குறித்து இணை இயக்குநர் அவர்களுக்கு வாய்மொழி உத்தரவு அளித்தார்*

    நண்பர்களே அங்கே சென்று பார்த்ததில் நமது பணிநியமனம் நடைபெற்ற பிறகே அடுத்த டெட் என்பது உறுதியாகியுள்ளது.. .


    அடுத்த நகர்வு : இதற்கான ஏதாவது செயல்பாடு மே மாதம் 23க்குள் நடக்கவில்லை எனில் அடுத்து தொடர் உண்ணாவிரதம் என 2017 டெட் ஆசிரியர் கூட்டமைப்பில் முடிவெடுக்கப்பட்டுளது..

    நன்றி...
    2017 TET உணர்வுள்ளவர்கள் தொடர்புக்கு
    P. RAJALINGAM PULIANGUDI CELL : 86789 13626

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி