விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்புங்கள்: மெட்ரிக். பள்ளி முதல்வர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2018

விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்புங்கள்: மெட்ரிக். பள்ளி முதல்வர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

பிளஸ் 2, பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி உத்தரவு பிறப்பித் துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாம்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.ஒருசில மாவட்டங்களில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பணி புரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பள்ளி நிர்வாகத்தினர் விடுவித்து பணிக்கு அனுப்பாமல் உள்ளனர்.

மேல்நிலைப் பொதுத்தேர்வுகளுக்கு அதிக அளவில் மாணவர்களை அனுப்பும் மெட்ரிக் பள்ளிகள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு ஆசிரியர்களை விடுவிக்காத செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.இதன் காரணமாக, விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. விடைத்தாள் திருத்தும் பணியானது ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களின் தார்மீக கடமைஆகும்.

எனவே அனைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் முதல்வர்களும் தங்கள் பள்ளிகளில் பணி புரியும் 2 ஆண்டு அனுபவம் வாய்ந்த 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு ஆசிரியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவித்து மதிப்பீட்டு முகாம்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்பிவைக்காத மெட்ரிக் பள்ளிகளின் தேர்வு முடிவுகள் கண்டிப்பாக வெளியிடப்பட மாட் டாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி