9-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் 60,000 பேருக்கு ஆங்கிலம் பேச பயிற்சி: செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2018

9-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் 60,000 பேருக்கு ஆங்கிலம் பேச பயிற்சி: செங்கோட்டையன்


9-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் பேச விரைவில் பயிற்சியளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இன்று பல்வேறு நலத்திட்ட பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 9-ம் வகுப்பு மாணவர்கள் 60,000 பேருக்கு ஆங்கிலம் பேச பயிற்சி வழங்கப்படும் என்றார்.


லண்டன், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளிலிருந்து சிறந்த கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலம் பேச 6 மாத காலத்திற்கு இந்த பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

6 comments:

 1. Vaiku ena varutho solira vendiyathu

  ReplyDelete
 2. Ana posting pathi mattum solradhey illa andha 13000 posting enna achi February LA sonnadhu after public examnnu

  ReplyDelete
 3. Tet paththi mattum ethum sollathinga sir!

  ReplyDelete
 4. Sola matum than seivar.seiya maataar

  ReplyDelete
 5. தங்களுக்கு உண்மையை மட்டும் பேச பயிற்சியளிக்க வேண்டும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி