மானியக்கோரிக்கையில் மாற்றம் வருமா???? தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு !!! - kalviseithi

May 29, 2018

மானியக்கோரிக்கையில் மாற்றம் வருமா???? தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு !!!

7வது கல்வி ஆண்டைநிறைவுசெய்யும்  12000க்கும்மேலான தொகுப்பூதிய பகுதிநேரஆசிரியர்களுக்கு(தற்போது சம்பளம்ரூ.7700) பட்ஜெட்மானியக்கோரிக்கையில் தமிழகஅரசு  புதிய அறிவிப்புகளைவெளியிட வலியுறுத்தல்.


மே மாதத்திற்கு ஊதியம்தரவேண்டி கல்விஅமைச்சர்,பள்ளிக்கல்வி முதன்மை செயலர்மற்றும் அனைவருக்கும்கல்விஇயக்க மாநில திட்டஇயக்குநர் ஆகியோரை கடந்தஏப்ரல் மற்றும் நடப்பு மேமாதத்தில் நேரில் சந்தித்துகோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.பரிசீலித்து வருவதாக அமைச்சர்மற்றும் செயலர் அவர்களும்நம்பிக்கை அளித்து இருந்தனர்.ஆனால் மே மாதத்திற்கு ஊதியம்தரவேண்டியது குறித்துஉத்தரவுகள் வரவில்லை எனஅனைவருக்கும் கல்வி இயக்கஅதிகாரிகள் சொல்கிறார்கள்.எனவே மே மாதம் ஊதியம்தருவது குறித்து செயல்முறைஆணைகளை உடனடியாகவெளியிடவேண்டும்.
     
வருகின்ற ஜீன் மாதத்தில்பணிமாறுதல் நடத்தஅனைவருக்கும் கல்வி இயக்கம்திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.எனவே ஏற்கனவே 25.10.2017ல்கல்விஅமைச்சர் அவர்களை சந்தித்தபோது அவரவர் இருப்பிடபகுதிக்கு அருகில்அனைவருக்கும் பணிமாறுதல்தருவதாக சொன்னபடி விரைந்துநடமுறைப்படுத்த வேண்டும்.
மேலும்ஏற்கனவேஅறிவிக்கப்பட்ட 7வதுஊதியக்கமிஷன் 30% ஊதியஉயர்வுடன் சேர்த்து கணிசமானஊதிய உயர்வு மற்றும் அனைத்துவேலைநாட்களிலும் முழுநேரவேலை குறித்தஅரசாணைகளை வெளியிட்டுஇந்த மானியக்கோரிக்கை கூட்டத்தொடரிலே அரசு வெளியிட அனைவரும்வலியுறுத்தி வருகின்றனர்என்பதை கூடுதல் கவனம்செலுத்தி ஆவன செய்திடவேண்டும்

ஊதிய முரண்பாடுகளைகலைய வலியுறுத்தும் ஒருநபர்குழுவிடம் தொகுப்பூதியபகுதிநேர ஆசிரியர்களுக்குஅனைத்து வேலைநாட்களிலும்முழுநேரப்பணியுடன்சிறப்புகாலமுறை ஊதியத்தில்பணியமர்த்த கோரிக்கை மனுஅளிக்கப்பட்டுள்ளதுஎனவேதமிழக அரசு இந்ததருணத்திலாவது தொகுப்பூதியபகுதிநேர ஆசிரியர்களுக்குஊதிய உயர்வுடன்கூடியநிலையான வேலையைஉறுதிசெய்து அறிவிப்புகளைபுதிய அரசாணையைவெளியிடவேண்டும்.
ஏற்கனவே ஜீன்ஜீலை2017ல் நடைபெற்ற  சட்டமன்றகூட்டத்தொடரில் தொகுப்பூதியபகுதிநேர ஆசிரியர்களுக்குஊதிய உயர்வு மற்றும்பணிநிரந்தரம் குறித்த திமுகஉறுப்பினர்களின்கேள்விகளுக்கு கல்வி அமைச்சர்பணிநிரந்தரம் செய்ய அரசுபரிசீலித்து வருகிறது என்றும்,பணிநிரந்தரம் செய்ய கமிட்டிஅமைக்கப்டும் எனவும்பதிலளித்துள்ளதை விரைந்துசெயல்படுத்த வேண்டும்மேலும்ஜனவரி 2018ல் நடைபெற்றகூட்டத்தொடரில் வேடச்சந்தூர்அதிமுக சட்டமன்ற உறுப்பினர்பரமசிவம் பகுதிநேரஆசிரியர்களுக்கு தற்போதுதரப்பட்டுவரும்தொகுப்பூதியமான ரூ.7700/-ஊதியத்தை உயர்த்தி தரவலியுறுத்தியதைகூட அரசுநடைமுறைப்படுத்தாமல் உள்ளதுவேதனையளிக்கிறது.

தமிழக முதல்வரை சந்தித்தபோது (2.11.2017)குறைந்தபட்சமாக சிறப்புகாலமுறை ஊதியத்தில் தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்களை பணியமர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.போராட்ட நாட்களில் 100%அளவில் பள்ளிகளை இயக்கிட அரசு உத்தரவிட்டு பகுதிநேர ஆசிரியர்களை முழுநேரமும் முழுஅளவில் பயன்படுத்தியதை அங்கீகரித்துதமிழக அரசு மனிதநேயத்துடன் இந்த பட்ஜெட் மானியக்கோரிக்கை கூட்டத்தொடரிலாவது புதிய அரசாணை வெளியிட்டு சிறப்பாசிரியர்களாக காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த அனைவரும் ஒருமனதாக தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுக்கிறோம்.
 இவன்செந்தில்குமார்மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,செல் : 9487257203

1 comment:

  1. வரலாறு காணாத பஸ் கட்டணம் உயர்வு பெட்ரோல் விலை உயர்வு பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு. ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் மாதம் 7700. மாதம் பன்னிரண்டு அரை நாட்கள் என்றாலும் இப்போதுள்ள நலத்திட்டம் மெயில் என்று பல்வேறு வேலைகளை முடித்து வாட்ச் மென் வந்து கிளம்புங்கள் இருட்டப்போகிறது என்று கூறும் வரை தலைமை ஆசிரியர்கள் கொடுத்த வேலைகளை முடித்து விட்டு கிளம்புகிறோம். இதை எல்லாம் அறியாத அமைச்சர் 2 மணி நேரம் மட்டும் பணிபுரிகிறோம் என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இப்படி ஒரு சிறப்பான திட்டம் தயாரித்து எங்களை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் கொன்று கொண்டிருக்கும் உங்களிடம் கேட்கிறோம் நாங்கள் எங்கள் தலைமுறைக்கு சொத்து சேர்க்க கேட்கவில்லை. இந்த சம்பளம் கால் வயித்துக்கு கூட போதாது. விலைவாசி அப்படி. மற்ற விஷயங்களில் மற்ற மாநிலங்களைவிட என்று ஒப்பிடும் அமைச்சர் இதையும் ஒப்பிடாமல் போவது ஏன்? இது நல்ல ஆட்சியின் அடையாளமா? எங்கள் 16549 பகுதி நேர ஆசிரியர்கள் வயித்துல அடிச்சு நீங்க வாழ்ந்துருவீங்க?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி