மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்திட்டத்தில் மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2018

மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்திட்டத்தில் மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு இதுவரை இருந்த கணினி அறிவியல் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: -  தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் மேல்நிலை பள்ளிகளில் உள்ள கணினி அறிவியல் பாடம் அவர்கள் பயிலும் துறைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டது. மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் என்ற பெயரில் ஒரே மாதிரியான பாடம் திட்டம் இதுவரை இருந்து வந்தது. இந்த நிலையில், கலைப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு கணினி பாடத்திட்டம் கடினமானதாக இருப்பதாகப் புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து, மாணவர்கள் பயிலும் துறைக்கு ஏற்ப தற்போது மூன்று பிரிவுகளாக கணினி பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதில், அறிவியல் துறையில் பயிலும் மாணவர்களுக்குக் கணினி அறிவியல் என்ற பெயரிலும், கணக்குப் பதிவியல் மற்றும் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு ஏதுவாக டேலி அடங்கிய கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்றும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், வொகேஷனல் எனும் தொழில்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறு கணினித் தொழில்நுட்பம் என பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

இந்த கல்வி ஆண்டு முதல் மேல்நிலை பள்ளிகளில் உள்ள 11-ஆம் வகுப்பிற்கு இந்த மாற்றம் நடைமுறை படுத்தப்படும் என்றும் அடுத்த கல்வி ஆண்டு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பாடதிட்டத்தின் மாற்றம் அமல்படுத்தப்படும் என்றும் பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. 

2 comments:

  1. please put computer science teacher for hr.sec level..

    ReplyDelete
  2. Subject ok computer science teacher posting eppo than varum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி