புதிய பாடத்திட்டங்கள் குறித்துபயில விரும்பும் ஆர்வமுள்ள ஆசிரியர்களின் பட்டியல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2018

புதிய பாடத்திட்டங்கள் குறித்துபயில விரும்பும் ஆர்வமுள்ள ஆசிரியர்களின் பட்டியல்.

புதிய பாடத்திட்டங்கள் குறித்து பயில விரும்பும் ஆர்வமுள்ள ஆசிரியர்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று சென்னைகோட்டூர்புரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் மாவட்ட தலைமைகல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். புதிய பாடத்திட்டம்  குறித்து பயிற்சி வழங்கப்பட்டு, 7 நாள் பயிற்சிக்காக 4 மையங்கள் அமைக்கப்படும்.செப்டம்பர் மாதத்திற்குள் மாணவர்கள் எண்ணிக்கை சரியாக இருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும்  மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில்  தொடக்க கல்வியில் கூடுதல் சேர்க்கை இருக்க வேண்டும் எனவும், கோடை  விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும்முன்பு தூய்மையாக வைத்திருக்க  ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.மாற்றப்பட்ட பள்ளிச்சீருடைகள் வரும் 1-ம் தேதி முதல் வழங்கப்படும். மேலும் தனியார் பள்ளியில் கட்டணங்கள் வரைமுறைப்படுத்தப்படும்.

தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கட்டண வரைமுறை தொடர்பாக தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வது குறித்து 2 நாள் சிறப்பு முகாம் அமைக்கப்படும். கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் தமிழக பள்ளிகளில் சேர1.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என அமைச்சர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி