பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின்உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2018

பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின்உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நடந்தது. தேர்வில் 1 லட்சத்து 33,568 பேர் கலந்துகொண்டார்கள்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

11 comments:

 1. சாதாரண மக்களூக்கு நீதியும் எட்டாக்கனி.வளர்க இலட்சங்கள் வீசியவர்கள்.

  ReplyDelete
 2. ஒட்டுமொத்தமாக அனைவரும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் என முறையாகப்படித்தவர்களுக்கும் சேர்த்து பட்டம் சூட்டப்பட்டுள்ளது.இதன் மூலம் சட்டம் சாமானியர்களுக்கு மட்டுமே என்பதும் நல்லவர்களுக்கும் உண்மைத் தேர்வர்களுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.முறைகேட்டில் ஈடுபட்டவர் / ஈடுபடாதவர் என ஏன் பிரித்தறிய இயலாது? அப்படி எனில் வாரியத்தின் பணி என்ன? இதில் கைது செய்யப்பட்டுள்ள கால்டாக்சி ட்ரைவர் / ஹோட்டல் ஊழியர்கள் தான் முக்கிய அதிகாரிகள்/ அலுவலர்களா? ...சரியான தீர்ப்பு தான் ( நியாயமாக படித்து தேர்வெழுதியவர்களுக்கு)

  ReplyDelete
 3. ஆய்வுக் கட்டுரை எழுதியவர் :- லண்டன் சுவாமிநாதன்
  கட்டுரை எண்:--1155; தேதி:-- ஜூலை 7, 2014.

  பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால், அன்னப் பறவை பாலை மட்டும் பிரித்துக் குடிக்கும் என்பது உண்மையா?

  பெரிய ஞானிகளை பரம ஹம்ச --- (பெருமைமிகு அன்னம்)--- என்று அழைப்பது ஏன்?

  அன்னப் பறவையை பரணர், பிசிராந்தையார் முதலிய தமிழ் புலவர்களும், நள தமயந்தி போன்றோரும் தூது விட்டது ஏன்?

  பெண்களின் நடையை அன்ன நடை என்று வருணிப்பது ஏனோ?  அதிசயச் செய்தி ஒன்று

  கல்வி கரையில கற்பவர் நாள் சில
  மெல்ல நினக்கிற் பிணி பல – தெள்ளிதின்
  ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர் ஒழிய
  பால் உண் குருகின் தெரிந்து -- (நாலடியார்)


  பொருள்:-- கற்கவேண்டிய விஷயம் கடல் போலப் பரந்தது. நம்முடைய வாழ்நாளோ சிறியது. போதாக் குறைக்கு நோய்கள் வேறு நம்மைப் பிடித்து ஆட்டுகின்றன. இதனால்தான் சான்றோர்கள் அன்னப் பறவை எப்படி தண்ணீரை விட்டுவிட்டு பாலை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்கிறதோ அப்படியே நல்ல நூல்களை மட்டும் எடுத்துப் படிப்பார்கள்.


  Translation:-- Learning has no bounds; the learners’ days are few and if they would calmly reflect, diseases are also many. Let them therefore carefully investigate and learn what is essential, making a good choice like the swan which drinks the milk separating it from the water.


  பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும் அதிசய சக்தி அன்னப் பறவைக்கு உண்டு என்பது வேத காலத்தில் இருந்து வழங்கும் ஒரு நம்பிக்கை. இதுவரை விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்வதில்லை. ஆயினும் இதற்கு ஒரு விஞ்ஞான விளக்கம் உண்டு!
  உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தலத்திலும் -- ( காட்சி 6- செய்யுள் 33)-- இந்தச் செய்தி வருகிறது. அதற்கு முன் யஜூர் வேதத்தில் -- (காடக, மைத்ராயணி, வாஜஸ்நேயி சம்ஹிதை) -- சோம ரசத்தைப் பருகிவிட்டு தண்ணீரை ஒதுக்கிவிடும் பறவை என்ற செய்தி இருக்கிறது. வடமொழிச் சொல்லான க்ஷீர என்பது பாலையும் தூய தண்ணீரையும் குறிக்கும் என்பர் வடமொழி அறிந்தோர்.


  அன்னம், குள்ள வாத்து, நாரை போன்ற பறவைகள் ஒரே இனத்தை சேர்ந்தவை. இதில் வாத்து போன்ற பறவைகளின் வாயில் சல்லடை போன்ற அமைப்பு உள்ளது விலங்கியல் படித்தோர் அறிந்த உண்மை. ஆக சகதியை ஒதுக்கிவிட்டு நீரையும், தனக்கு வேண்டிய புழுப் பூச்சிகளையும் வாத்துகள் உண்ணும். ஒருவேளை நமது முன்னோர்கள் இந்த விலங்கியல் புதுமையைக் குறிக்க இப்படி – பால்/தண்ணீர்—கதை சொல்லி இருக்கலாம். அல்லது அழிந்து போய்விட்ட, நமக்குத் தெரியாத வேறு வகை அன்னப் பறவை பற்றியும் சொல்லி இருக்கலாம்.


  அன்னப் பறவைகளில் ராஜ ஹம்சம், கால ஹம்சம், க்ஷுத ஹம்சம், மஹா ஹம்சம், காதம்ப ஹம்சம், மத்த ஹம்சம் என்று பல வகைகளை வடமொழி நூல்கள் பாடுகின்றன.  அதிசயச் செய்தி இரண்டு

  பரமஹம்ச என்று முனிவர்களை அழைப்பது ஏன்?
  உயர் அன்னம் (பரம ஹம்ச) என்று ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘ஒரு யோகியின் சுயசரிதை’ என்ற புகழ்பெற்ற நூல் எழுதிய பரமஹம்ச யோகானந்தா ஆகியோர் அழைக்கப்படுகின்றனர். ஒரு முஸ்லீம் படைத் தளபதிக்கு சங்கேத மொழியில் உபதேசம் வழங்கிய சதாசிவ பிரம்மேந்திரர் ( என்னுடைய ஒரு கட்டுரையில் இவரது அற்புதச் செயல்கள் உள்ளன.) எழுதிய அருமையான, இனிமையான வடமொழிப் பாடல்களில் அவரது முத்திரை ‘’பரமஹம்ச’’ என்ற சொல் ஆகும்.

  ReplyDelete
 4. பயிர்களின் ஊடே களை உள்ளது.களையை அகற்ற பல கருவிகள் நவீன உலகில் உள்ளது.அதை விடுத்து களையை அகற்றுவதற்குப் பதிலாக களையுடன் ஒட்டுமொத்தப் பயிரையும் அழித்து மீளவும் நிலத்தை உழுது தயார்படுத்தி பயிரிடுவது நியாயமா? மீளவும் களை தோன்றாது என்பதற்கு என்ன உத்திரவாதம்? களையை அகற்ற பல கருவிகள்,நபர்கள் இருக்கையில் பயிரை அழிப்பதன் நோக்கம் என்ன? படித்தவர்கள் கூறுங்கள்

  ReplyDelete
 5. நீதிக்கதை : கோவில் ஒன்றில் M.Sc/ M.A/ B.E/ M.E முடித்தவர்களுக்கு வெகுமதியுடன் கூடிய அறுசுவை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உணவு உண்ண கீழ்க்காணும் நிபந்தனைகள் உண்டு
  1) பொறியியல் அல்லாத பட்டதாரிகள் முதுகலைப்பட்டத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  2) பொறியியல் பாடப்பிரிவினர் B E/ M E ஏதாவது ஒன்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  3) உணவு உண்ண விரும்புபவர்கள் முறையாகக் குளித்து சுத்தமாக ,கோவிலில் வழங்கப்படும் சீருடை அணிந்தும் கோவில் உரிமையாளர் கையொப்பம் இட்ட சீட்டும் கொண்டு வந்தால் தான் உணவு உண்ண அனுமதி வழங்கப்படும்
  உணவு பரிமாறும் நேரம் வந்து விட்டது.பொறியியல் அல்லாத பாடப்பிரிவினருக்கு அனைத்தும் சரிபார்க்கப்பட்டு உணவு வழங்க தட்டு வழங்கும் நிலையில் திடீரென்று சில புகார் பெறப்படுகிறது.அதில் சிலர் குளிக்காமலும் சிலர் கோவில் சீருடை அணியாமலும் ,சிலர் கோவில் உரிமையாளர் கையெழுத்தை தாங்களே போட்டு உணவு உண்ண வரிசையில் நிற்பதாக புகார் பெறப்படுகிறது.இதனை அடுத்து குளித்தவர் குளிக்காதவர் / கோவில் சீருடை அணிந்தவர் / கோவில் சீருடை அணியாதவர் / என்றவாறு பிரித்தறிய முடியாது என்று கூறி முறையாக வந்தவங்களுக்கும் உணவு வழங்க மறுக்கப்படுகிறது.இவர்களைப் பிரித்தறிய தற்போதைய தொழில் நுட்பத்தில் முடியும் அதற்கென கண்டறிவதற்கு ஆட்கள் நியமிக்கலாம் என்று கூறியும் முறையானவர்களுக்கு உணவு வழங்க மறுக்கப்பட்டு அனைவரும் குளித்து வந்தால் மட்டுமே உணவு என்று கூறி சமைத்த உணவும் கீழே கொட்டப்பட்டு முறையான அனுமதியுடன் வந்தவர்களுக்கும் உணவு மறுக்கப்பட்டு பசியுடன் வந்தவர்களுக்கு மீண்டும் பட்டினியாக சில காலங்களுக்கு இருங்கள் என்று முதலாளியால் உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது

  ReplyDelete
 6. Who ll give assurity that the next exam wont be cancelled for these kind of silly reasons? On what base v shd prepare for the upcoming exam

  ReplyDelete
 7. Who ll give assurity that the next exam wont be cancelled for these kind of silly reasons? On what base v shd prepare for the upcoming exam

  ReplyDelete
 8. Guys don't worry, re-exam is not gonna occur. Still there are many righteous judges in this country, justice will be delivered to the deserved. Let's wait for Madurai judgement.தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும.

  ReplyDelete
 9. இந்த தீர்ப்பு ஒரு மாதம் முன்பு வழங்கப்பட்டது

  ReplyDelete
 10. முக்கிய வழக்கு நீதி மன்றத்தில் வந்தால் அதில் மக்கள் நலன் இருந்தால் கண்டிப்பாக அந்த வழக்கு online la live ஒளிபரப்ப வேண்டும் . அப்போ தான் அந்த வழக்கின் நீதி மக்களுக்கு வெளிப்படையாக கிடைக்கும். Digital India .

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி