உழைப்பாளர் தின கவிதை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 1, 2018

உழைப்பாளர் தின கவிதை

*மே நாள்*

எந்திர சத்தங்கள் காதின்வழி கத்தியிறக்கி நெஞ்சில் குருதி கீறி எடுக்கும்..

வெந்தணலில் பாதம் சுட வியர்வை பெருகி வீதி ஓட களைப்பைத் துடைத்து வேலை பார்க்கையில் மாலை வரும்போது மகள் வாங்கி வரக்கேட்ட மரப்பாச்சி பொம்மையது கண்ணில் நிற்கும்..

இடைவேளையில் ரெண்டு வாய் அள்ளிப்போடும் அரிசிச்சோறு பேரமிர்த வலிநிவாரணி..
நின்ற எந்திரம் மீண்டும் இயங்க வாழ்வின் ஓட்டமெண்ணி சுமை தாங்குவோம்

வாரக்கூலி மாதக்கூலி ஏதாயினும் வசதி பெருசாய் தருவதில்லை பிய்ந்த செருப்பு தைத்து தைத்தே வாழும் முதலில்லா ஆட்கள் நாங்கள்..

கலப்பை தூக்கியவனும் பாரம் சுமந்தவனும் ஆலை வேலையாளும் வறுமையாள மட்டுமே வாழ்கிறவர்கள் 
மேல்வர்க்க மந்தைகளுக்கு ஓட்டின் எண்ணிக்கையாய் போனவர்கள்

ஏக்கங்களும் நிராசைகளும் நிரம்ப உண்டு இங்கு 
மகிழ்வினைத் தவிர

சூரியனுக்கு முன்விழித்தும் ஒளியில்லை 
இருள்சேர திரும்புகிற இவர்தம் வாழ்வில்..

வசதிகளை தருபவர்களே
வசதியின்றி வதைபவர்களே
நீங்களின்றி ஏது இப்பொய்யுலகு
உங்கள் உழைப்பின் ரத்தத்தின் நெடியின்றி ஏதிங்கு பிரமிக்கிற பொளுளாதாரம்
உங்கள் உழைப்பு தானே இவர்களின் ஆதாரம்..

உங்கள் கண்ணீர் வற்ற என்றேனும் ஓர்நாள் உதிக்கும் புரட்சி நெருப்பு 
நீங்களே பெருஞ்சிறப்பு
வணங்கி மகிழ்கிறேன்
உழைக்கும் தோழர்களே

*சீனி.தனஞ்செழியன்*
முதுகலைத்தமிழாசிரியர்,
அஆமேநி பள்ளி,
திருவலம்,
வேலூர்மாவட்டம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி