பொறியியல் படிப்புகளுக்கு ஆப்லைன் முறையை அனுமதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2018

பொறியியல் படிப்புகளுக்கு ஆப்லைன் முறையை அனுமதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்தப்படும் என்ற விதிமுறையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2018-19-ம் ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தல், கலந்தாய்வு, சான்றுகள் சரிபார்த்தல், இடங்கள் ஒதுக்கீடு அனைத்தும் ஆன்லைன் மூலமே நடைபெறும் என்று அரசு அறிவித்தது. இந்த நடைமுறையால் கணினி வசதி மற்றும் இணையதள தெளிவு இல்லாத ஏழை கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்பை இழக்க நேரிடும் என்று காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் பொன்பாண்டியன் என்ற வழக்கறிஞரும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதனிடையே அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நாளை தொடங்குகிறது. மாணவர்கள் மே 30-ம் தேதி வரை பதிவு செய்யலாம். ஆன்லைன் பதிவு முடிந்தவுடன் ஜூலை மாத முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆரம்பமாக உள்ளது. இந்த ஆண்டு சான்றுதல் சரிபார்ப்பு, கலந்தாய்வு என அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி