வாட்ஸ் அப் செயலியைத் திறக்காமலேயே வேண்டியவருக்கு மட்டும் மெசேஜ் செய்யும் புதிய வசதியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தங்களது பயனாளர்களுக்கு ஏற்ற பல புதிய வசதிகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
ஃபேஸ்புக் F8 கான்ஃபிரன்ஸிங்கில் அந்நிறுவனத்துக்குச் சொந்தமான ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் பயனர்களை ஈர்க்கும் பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.அதில் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் சாட் செய்யும் முறையில் புதிய வசதிகள், வாட்ஸ் அப் குரூப்வீடியோ கால், ஸ்டிக்கர்ஸ், அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யும் நேரத்தை அதிகமாக்கியது, ஸ்மார்ட் ஃபோனில் டெலீட் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை மீண்டும் பதிவிறக்கம் செய்வது போன்ற பல அம்சங்களைத்தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
தற்போது வாட்ஸ் அப் செயலியைத் திறக்காமலேயே வேண்டியவருக்கு மெசேஜ் செய்யும் புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக W beta- வில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி அவர்கள் உருவாக்கியுள்ள 'wa.me' என்ற டொமைன்-யை பதிவு செய்து அதில் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வசதிக்குப் பயனர்கள் தங்களின் வாட்ஸ் அப்-பை 2.18.138 க்கு மேம்படுத்த வேண்டும். இந்த வசதி ஆன்ராய்டு பீட்டாவில் மட்டும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
பயனர்கள் முதலில் https://wa.me/91 (phone number) என்ற தளத்தில் தாங்கள் மெசேஜ் செய்ய விரும்புவரின் ஃபோன் நம்பரை டைப் செய்ய வேண்டும். அதன் பின் URL தானாக வாட்ஸ் அப் பகுதிக்குப் பயனர்களைக் கொண்டு செல்லும். அங்கு நீங்கள் நம்பர் பதிவிட்டவருடன் மட்டும் மெசேஜ் செய்யலாம். நீங்கள் பதிவிட்ட நம்பர் தவறானதாக இருந்தால் அதுவே தவறு எனச் சுட்டிக்காட்டி விடும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி