வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சானூர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் புலவர் நடராஜன். இவர் வாழ்ந்த ஒரு கோடி மதிப்பிலான வீட்டை குடியாத்தம் பகுதியில் மகளிருக்கான நூலகம் அமைக்க தானமாக வழங்கியுள்ளார். இந்த நூலக கட்டிடத்தை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் வேலூர்மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் ஆகியோர் திறந்து வைத்தனர்.பின்னர் தான் வாழ்ந்த வீட்டை மகளிர் நூலகத்திர்க்கு தானமாக வழங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர் புலவர் நடராஜனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.சி.வீரமணி, நூலகத்திர்க்காக தனது வீட்டை தானமாக வழங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர் புலவர் நடராஜனுக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். மேலும் விரைவில் குடியாத்தத்தை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்க ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
வாழ்துக்கள் ஐயா. உலகம் உள்ளவரை ஆசிரியர் சமுதாயம் உங்களுக்கு நன்றிகடன் பட்டு இருக்கிறது.உங்கள் முலம் கர்மவீரர் காமராசரை பார்கிறோம்.நன்றி ஐயா .
ReplyDeleteவாழ்துக்கள் ஐயா. உலகம் உள்ளவரை ஆசிரியர் சமுதாயம் உங்களுக்கு நன்றிகடன் பட்டு இருக்கிறது.உங்கள் முலம் கர்மவீரர் காமராசரை பார்கிறோம்.நன்றி ஐயா .
ReplyDeleteAyya sirrappu
ReplyDeleteAyya sirrappu
ReplyDeleteஇப்படி ஒரு பிறப்பு அரிது
ReplyDelete