கிராமத்தினரே நடத்தும் பள்ளி; 25 குழந்தைகள்... ஒரே ஆசிரியர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2018

கிராமத்தினரே நடத்தும் பள்ளி; 25 குழந்தைகள்... ஒரே ஆசிரியர்!

சிவகங்கை அருகே ஒக்குப்பட்டி ஊராட்சி வி.புதுப்பட்டியில்தன்னார்வ நிறுவனம் கைவிட்ட பள்ளியை கிராமத்தினரே நடத்துகின்றனர். இங்கு5 வகுப்புகள், 25 குழந்தைகள் படிக்கின்றனர்.
ஒரே ஆசிரியர் விடுப்பு எடுக்காமல் பணிபுரிகிறார்.மலையடிவார பகுதியான இங்கு 1986 ல் 'அசேபா' தன்னார்வ நிறுவனம் சார்பில் தொடக்கப் பள்ளி துவக்கப்பட்டது. சில ஆண்டுகளிலேயே நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. அந்நிறுவனம் பள்ளியை நடத்த முடியாமல் 2014 ல் கைவிட்டது. இதனால் 100 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து கிராமத்தினரே பள்ளியை நடத்துகின்றனர். தன்னார்வ நிறுவனத்தில் பணிபுரிந்த ஆசிரியர் வள்ளியம்மை விடுப்பு எடுக்காமல் 5 வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.அவர் கூறுகையில், ''துவக்கத்தில் ஐந்து ஆசிரியர்கள் இருந்தனர். பள்ளியை கைவிட மனமில்லாமல் தொடர்ந்து நடத்துகிறேன். தற்போது ஐந்து வகுப்புகள் உள்ளன. விடுப்பு எடுக்காமல் பணிபுரிகிறேன்,'' என்றார்.முன்னாள் ஊராட்சித் தலைவர் பழனி கூறியதாவது: இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். இரு ஆண்டுகளுக்கு முன், 50 குழந்தைகள் இருந்தனர். பள்ளி தொடர்ந்து நடக்குமா என்ற பயத்தில் சிலர் பக்கத்து ஊர்களில் குழந்தைகளை சேர்த்தனர்.

ஏழு கட்டடங்கள், ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. 'குறைந்தது 25 மாணவர்கள் இருந்தாலே அரசு பள்ளி துவங்கலாம்' என விதிமுறை உள்ளது. தற்போது ஒரு ஆசிரியருக்கு தொகுப்பூதியம் தருவதாக அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். பள்ளியை அரசு ஏற்று நடத்தினால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி