அப்துல் கலாம் நினைவஞ்சலி கவிதை - ஆசிரியர் திரு சீனி.தனஞ்செழியன் - kalviseithi

Jul 28, 2018

அப்துல் கலாம் நினைவஞ்சலி கவிதை - ஆசிரியர் திரு சீனி.தனஞ்செழியன்

கனவு நாயகனுக்கு கவிதாஞ்சலி

நீ சைக்கிள் மிதித்து பேப்பர் போட்டு படித்த குட்டிப்பையனாம் 
உன் பால்யம் இவ்வாறு தானென அறிமுகம் எனக்கு

காசுப்பள்ளிகளே
பெருமை கூட்டும் என்ற கூட்டத்திற்கு மத்தியில் அரசுப்பள்ளியின் அக்னி அவதாரம் நீ

விஞ்ஞான உலக கவிப்புயல் நீ
உச்ச பதவியிலும் இச்சை கொள்ளாத அன்பார்ந்த ஆசிரியன் நீ

மாமாவாய் நேரு கிடைத்தபோது
சக நண்பனாய் மாணவ உள்ளங்களுக்குக் கிடைத்த பொக்கிஷம் நீ

எளிமையே உன்னை உதாரணமாக்கிக் கொள்ளுமளவிற்கு பேரெளிமையாளன் நீ

பகட்டும் பந்தாவுமற்ற பகலவனே
பொக்ரானில் உன் சக்தியைக் காட்டி
தாய் நிலத்தை மேலும் தலை நிமிர வைத்தாய்

அறிவையே சொத்தாய் சேர்த்த எங்களின் கனவு வித்தே
புன்னகைத்த உன் பூமுகம் இன்று படமாய்
நீ நடந்த வழி எமக்கு பாடமாய்
உன் நினைவு நாளினில் விழிதனில் பெருகுகிறது பெருங்கண்ணீர் குடங்குடமாய்...

கனவை விதைத்து கனவானவனே
உன் சிறகுகளேந்தியே பயணிக்கிறோம்
சிகரங்களை நோக்கி...


சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத்தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்.
வேலூர் மாவட்டம்.

7 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி