ஆசிரியர்களின் ஊதிய விவரங்களை தயாரித்து வழங்கும் பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பா?"
* "சங்கரன் கோவிலில் உள்ள தனியார் கணினி நிறுவனத்திடம் ஊதிய விவரங்கள் தயாரிக்கும் பணி ஒப்படைத்தது கண்டுபிடிப்பு"
* மாநிலம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா என விசாரணை நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை
*ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்கள் திருடு போக வாய்ப்பு என ஆசிரியர்கள் அச்சம்.
Click here - Thanthi TV Video Link....
கணிப்பொறியில் தான் அனைத்து வேலைகளும் என்று நிலை வந்த பிறகு கணிப்பொறியை இயக்குவதற்கு என்று இதுவரை யாரையும் நியமனம் செய்ய வில்லை. வருவாய்த்துறை வேலை, வேலைவாய்ப்பக வேலை.... என்று அனைத்து வேலைகளும் நடக்கும் இடம் பள்ளி என்றாகிவிட்டது. இப்பணியைச் செய்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் நெருக்கடி கொடுத்து பணிகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இது அரசு அதிகாரிகளுக்கு தெரியாதா? கல்வித்துறை அதிகாரிகள் கேட்கும் நாள்தோறும் பல்வேறு விவரங்கள் என்று பணிச்சுமை நாள்தோறும் நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. பல இடங்களில் பயிற்சி பெற்றவர்கள் இல்லை எனும் போது இந்த நெருக்கடிகளை சமாளிக்க தனியார் நிறுவனங்களை நாடுகின்றனர் என்பது உண்மை. ஒவ்வொரு பள்ளிக்கும் கணிப்பொறி இயக்குவதற்கு என்று தனியாக ஆட்களை நியமிப்பது தான் சிறந்த வழி! பகுதி நேர ஆசிரியர்கள் (கணிப்பொறி) முழுநேரமாகவும், வீட்டில் வந்தும் இந்த பணிச்சுமைகளை செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களை கணிப்பொறி இயக்குபவர்களாகவும் நியமிக்கலாம். செய்யுமா அரசு? செய்யவேண்டியவற்றை செய்யாமல் பிறகு விசாரணை என்றால் எப்படி? நிறைய அலுவலகங்களில் ஆட்களே இல்லை. பிறகு என்னதான் செய்வார்கள்?
ReplyDelete