15 லட்சம் மாணவர்களுக்கு, 'லேப் டாப்' : ரூ.3,000 கோடியில், வழங்க தமிழக அரசு முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2018

15 லட்சம் மாணவர்களுக்கு, 'லேப் டாப்' : ரூ.3,000 கோடியில், வழங்க தமிழக அரசு முடிவு



தமிழக அரசின், இலவச, 'லேப்டாப்' இந்தாண்டு, 15 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசு சார்பில், அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, 'லேப்டாப்'பும், பிளஸ் 1 படிப்போருக்கு சைக்கிளும், இலவசமாக வழங்கப்படுகிறது.கடந்த, 2017 - 18ல், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை; 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்ற, சில மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. மீதமுள்ள, ஐந்து லட்சம் பேருக்கு வழங்க வேண்டிஉள்ளது.

அதேநேரத்தில், பள்ளி படிப்பிலேயே மாணவர்களுக்கு பயன்தரும் வகையில், இலவச லேப்டாப் வழங்கலாம் என, பள்ளி கல்வி அதிகாரிகள் முடிவு செய்தனர். எனவே, நடப்பு கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் போதே, லேப்டாப்பும் வழங்க, ஆலோசனை நடந்துள்ளது.இதன்படி, 2017 - 18ல், பிளஸ் 2 படித்தோர், நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 படிப்போருக்கு, இந்த ஆண்டிலேயே, லேப்டாப் வழங்கப்பட உள்ளது. பிளஸ் 1 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதால், அவர்கள், நீட், ஜே.இ.இ., போன்ற, நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக, உதவியாக இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனால், நடப்பு கல்வி ஆண்டில், மூன்று தரப்பு மாணவர்களுக்கும், 3,000 கோடி ரூபாய் செலவில், லேப்டாப்கள், 500 கோடி ரூபாய் செலவில், சைக்கிள் கள் என, மொத்தம், 15 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில்துவங்கும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. 15 லட்சம் மாணவர்களுக்கு 3000 கோடியில் லேப்டாப் என்றால் ஒரு லேப்டாப் 20000 ரூபாய் செலவு கணக்கு காட்ட படுகிறது. இவர்கள் மொத்தமாக வாங்குவதால் 20000 ஆயிரத்திற்கு நல்ல லேப்டாப் கிடைக்கும், நல்ல லேப்டாப் அரசு வழங்குமா? இவர்கள் வழங்க உள்ள லேப்டாப் 20000 ரூபாய்க்கு தரமானதுதான?.........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி