தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படித்து பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின் விவரங்கள் தனியாருக்கு விற்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பரபரப்பான சூழல்நிலையில், ஆசிரியர்களின் ஊதியப் பட்டியல் (சம்பளம்) தனியார் கணினி மையங்களில் தயாரிக்கப்படுவது தெரியவந்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது, ஆசிரியர்களின் ஊதியப்பட்டியலும் தனியார் கணினி மையங்களில் ைவத்துதான் தயாரிக்கப்படுகிறது என்ற விவரம் தெரிந்து கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 3 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஊதியத்தில் மெத்தமான இருப்பது கவலை அளிக்கிறது. அதனால் இதுகுறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பள்ளிக் கல்விஅமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ‘ஆசிரியர்களின் சம்பள பில்கள் ஒரு சில தனியார் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படுவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அதை தடுப்பதற்குரியநடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பள்ளிகளில் உள்ள கணினி இயக்குநர்கள் மூலம் இந்த பணிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது’ என்றார்.
குழந்தைகளைப் படிக்க வைத்துக் கொண்டுள்ளபோது நாமும் எத்தனை தேர்வுகளுக்குத் தான் படித்துக் கொண்டே இருப்பது? தேர்ச்சி பெற்றும் என்ன பிரயோஜனம்? என்ன விடிவுகாலம்? இஷ்டத்திற்கு தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்து வீடு வீடாகச் சென்று ஆள்பிடித்து இருக்கும் சொத்துகள் அனைத்தையும் விற்றுப் படித்துவிட்டு இப்பொழுது தேர்வு, தேர்வு என்று வாழ்க்கையைத் தொலைத்து தேர்வில் தேர்ச்சி பெற்றும் வேலைக்கு வழி இல்லாமல் நொந்து கிடக்கும் வகையில் அரசியல் வியாதிகளும், அரசு அதிகாரிகளும் நாளுக்கு ஒரு திட்டம் கொண்டுவந்து வாழ்க்கையை நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். தகுதி இருக்கா என்றார்கள்! அதிகமாகவே இருக்கு என்றோம். அதில் வயது அதிகமாக உள்ளவர்கள் பணிவாய்ப்பே பெற்றுவிடக்கூடாது என்று அறிவியல் பூர்வமான முறையில் கணக்கிட்டு வாழ்க்கையை கெடுத்தார்கள். இப்பொழுது மற்றோர் தேர்வு எழுத வேண்டும். இப்படியே தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பது தற்போது படித்தவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்காது. ஆனால் குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் சாப்பாடு போட வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களின் நிலை? வரலாறு காணாத கல்விச் செலவுகள் என்று சமாளித்தாக வேண்டுமே! நாங்கள் போய் கோச்சிங் சென்டரிலேயே தங்கி பயில முடியுமா? எப்போது இந்த நிலை மாறுமோ?.....
ReplyDeleteகணிப்பொறியில் தான் அனைத்து வேலைகளும் என்று நிலை வந்த பிறகு கணிப்பொறியை இயக்குவதற்கு என்று இதுவரை யாரையும் நியமனம் செய்ய வில்லை. வருவாய்த்துறை வேலை, வேலைவாய்ப்பக வேலை.... என்று அனைத்து வேலைகளும் நடக்கும் இடம் பள்ளி என்றாகிவிட்டது. இப்பணியைச் செய்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் நெருக்கடி கொடுத்து பணிகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இது அரசு அதிகாரிகளுக்கு தெரியாதா? கல்வித்துறை அதிகாரிகள் கேட்கும் நாள்தோறும் பல்வேறு விவரங்கள் என்று பணிச்சுமை நாள்தோறும் நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. பல இடங்களில் பயிற்சி பெற்றவர்கள் இல்லை எனும் போது இந்த நெருக்கடிகளை சமாளிக்க தனியார் நிறுவனங்களை நாடுகின்றனர் என்பது உண்மை. ஒவ்வொரு பள்ளிக்கும் கணிப்பொறி இயக்குவதற்கு என்று தனியாக ஆட்களை நியமிப்பது தான் சிறந்த வழி! பகுதி நேர ஆசிரியர்கள் (கணிப்பொறி) முழுநேரமாகவும், வீட்டில் வந்தும் இந்த பணிச்சுமைகளை செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களை கணிப்பொறி இயக்குபவர்களாகவும் நியமிக்கலாம். செய்யுமா அரசு? செய்யவேண்டியவற்றை செய்யாமல் பிறகு விசாரணை என்றால் எப்படி? நிறைய அலுவலகங்களில் ஆட்களே இல்லை. பிறகு என்னதான் செய்வார்கள்?
ReplyDeletetrue
ReplyDeleteபள்ளிகளில் இளநிலை உதவியாளர் உதவியாளர் கணினி இயக்குபவர் போன்ற பணியிடங்கள் நிரப்ப முடியவில்லை அதனால் தான் ஆசிரியர்கள் இது மாதிரி தனியாரை நோக்கி செல்கின்றனர். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் பணி தவிர இது மாதிரியான பணிகள் செய்ய வேண்டியுள்ளது. காலம் நேரம் கருத்தில் கொண்டு தனியார் மூலம் செய்ய முயல்கின்றனர். இது யாருடைய தவறு பணியாளர்களை நியமிக்க இவர்களால் முடியவில்லை அரசு செயல்படுகிறதா இல்லை இது மாதிரி அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை குறை கூறிக்கொண்டே இருக்கிறது.
ReplyDelete100 தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகள் பட்டியலை இதுவரை சரியான நேரத்தில் கொடுக்க முடியவில்லை. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அரசுக்கு புரிகிறதா இல்லை புரியாமல் செயல்படாமல் உள்ளதா
ReplyDelete