பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடத்தை நிரப்ப இரண்டாம் கட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் தலைமையாசிரியர் பதவி உயர்வு, பணி மாறுதல், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, பணி மாறுதலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் காலிப்பணியிடம் இல்லை எனக் கூறி பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தவில்லை.ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராகவும், பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. மேலும் தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளிலும் இதுவரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
எனவே, காலிப்பணியிடத்தை நிரப்ப பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2ம் கட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் கூறுகையில்,' தமிழகத்தில் 100 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேல் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் அப்பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது. எனவே பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 ம் கட்ட பொதுமாறுதல் கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும்' என்றார்.
Pg trb exam varuma
ReplyDeleteEllorum santhoshama valanum adampara udai athigama sampathicha ... please second counselling including upgrade school vacancy for all trs punniyavangale 20 district vacancy not displayed so kindly consider the needed thing unga vamsam needuli vazha
ReplyDelete78 yr aged mother living lonely sugar patient
ReplyDelete+1, +2 மாணவர்களின் நலன் கருதி 3000 PG முதுகலை ஆசிரியர் பணியிடங்களை PG TRB தேர்வு மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும்
ReplyDeleteஉடனடியாக அறிவிப்பு வர காத்துகோண்டு இருகிறார்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
ReplyDeleteஉடனடியாக அறிவிப்பு வர காத்துகோண்டு இருகிறார்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
ReplyDelete