ஆசிரியைக்கு கார் பரிசு - மாணவர்களின் பெற்றோர்அசத்தல் - kalviseithi

Aug 29, 2018

ஆசிரியைக்கு கார் பரிசு - மாணவர்களின் பெற்றோர்அசத்தல்


மஹாராஷ்டிராவில், அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற, ௧௯ மாணவர்களின் பெற்றோர் இணைந்து, பயிற்சி அளித்த ஆசிரியைக்கு, காரை பரிசாக அளித்து, அசத்தியுள்ளனர்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது.

புனேயை அடுத்துள்ள ஷிருர் தாலுகாவில் உள்ள பிம்பிள் காலசா கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியைச் சேர்ந்த, ௧௯ மாணவர்கள், அரசு வழங்கும்கல்வி உதவித் தொகை தேர்வில், சமீபத்தில் தேர்ச்சி பெற்றனர்.இதையடுத்து, இந்த மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து, பயிற்சி அளித்த ஆசிரியை லலிதா துாமலுக்கு, ஒரு காரை பரிசாக அளித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக அரசு உதவித் தொகையைப் பெறுவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சார்பில், ஆசிரியர்களுக்கு, 'பிரிஜ், பைக்' போன்றவை பரிசாக அளிக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி