10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணக்கு பாடத்தில் மட்டும் 2 வகையான வினாத்தாள் - குழப்பும் CBSE! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2018

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணக்கு பாடத்தில் மட்டும் 2 வகையான வினாத்தாள் - குழப்பும் CBSE!


சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து வருபவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வின்போது கணக்கு பாடத்தில் மட்டும் 2 வகையான வினாத்தாள் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்து உள்ளது.

மாணவர்களின் உயர்கல்வியை கருத்தில் கொண்டு இந்த புதிய மாற்றத்தை கொண்டு வருவதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்து உள்ளது. வரும் கல்வியாண்டு முதல்இந்த புதிய வினாத்தாள் முறை நடைமுறைக்கு வரும் என்றும் கூறி உள்ளது.

சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்வின் போது இரட்டை வினாத்தாள் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஏதாவது ஒரு வினாத்தாளை மாணவர்கள் தேர்வு செய்து தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இதில், ஒரு வினாத்தாளில் வழக்கமான கேள்விகளும், மற்றொரு வினாத்தாளில் கடினமான கேள்விகளும் இடம்பெறும் என்றும், இதில் மாணவர்கள் தாங்கள் விருப்படும் வினாத்தாளை தேர்வு செய்துகொண்டு தேர்வு எழுதலாம்.

பத்தாம் வகுப்புக்கு பின் மேல்நிலைக் கல்வியில் சேர விரும்பும் குரூப்புக்கு தகுந்தவாறு கேள்வித்தாளை தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால், தாங்கள் எதை தேர்வு செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு விண்ணப்பத்தின்போதே தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்து.இரண்டு வகையான வினாத்தாள்களை தயார் செய்வதற்காக, 15 பேர் அடங்கிய கமிட்டி உருவாக்கப் பட்டுள்ளது. இதில், பள்ளி மற்றும் பல்கலைகளை சேர்ந்த கணித நிபுணர்கள், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலை சேர்ந்த ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த முறை இந்த ஆண்டு சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து பிளஸ்2 தேர்வின்போதும் இதுபோல வினாத்தாள் அமைக்க சிபிஎஸ்இ முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி