உலக வரலாற்றில் இன்று ( 18.09.2018 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2018

உலக வரலாற்றில் இன்று ( 18.09.2018 )செப்டம்பர் 18 (September 18) கிரிகோரியன் ஆண்டின் 261 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 262 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 104 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

96 – டொமிஷியன் கொலை செய்யப்பட்டதை அடுத்து நேர்வா ரோமப் பேரரசன் ஆனான்.
1502 – கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது நான்காவது கடைசியுமான கடற்பயணத்தின் போது கொஸ்டா ரிக்காவில் தரையிறங்கினார்.
1635 – புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பேர்டினண்ட் பிரான்ஸ் மீது போர் தொடுத்தான்.
1739 – பெல்கிரேட் நகரம் ஒட்டோமான் பேரரசிடம் கையளிக்கப்பட்டது.
1759 – கியூபெக் நகரை பிரித்தானியர் கைப்பற்றினர்.
1809 – லண்டனில் ரோயல் ஒப்பரா மாளிகை திறக்கப்பட்டது.
1810 – சிலியில் முதலாவது அரசு (junta) அமைக்கப்பட்டது.
1812 – மொஸ்கோவில் பரவிய தீ நகரின் முக்கால் பகுதியை அழித்துவிட்டு அணைந்தது. பெட்ரொவ்ஸ்கி அரண்மனையில் இருந்து நெப்போலியன் கிரெம்ளினுக்கு வந்தான்.
1851 – நியூ யோர்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது.
1895 – புக்கர் டி. வாஷிங்டன் தனது புகழ்பெற்ற ‘அட்லாண்டா மத்தியஸ்தம்’ என்ர சொற்பொழிவை ஆற்றினார்.
1906 – ஹொங்கொங்கில் ஏற்பட்ட புயல் மற்றும் ஆழிப்பேரலையினால் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
1911 – ரஷ்யப் பிரதமர் பீட்டர் ஸ்டோலிப்பின் கீவ் ஒப்பரா மாளிகையில் சுடப்பட்டார்.
1914 – முதலாம் உலகப் போர்: தென்னாபிரிக்கப் படைகள் ஜெர்மனியின் தென் மேற்கு ஆபிரிக்காவில் தரையிறங்கினர்.
1919 – நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1922 – உலக நாடுகள் அணியில் ஹங்கேரி இணைந்தது.
1924 – மகாத்மா காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
1932 – நடிகை பெக் எண்ட்விசில் ஹாலிவுட் சின்னத்தின் “H” எழுத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
1934 – சோவியத் ஒன்றியம் உலக நாடுகள் அணியில் இணைந்தது.
1939 – இரண்டாம் உலகப் போர்: இக்னேசி மொஸ்கிக்கி தலைமையிலான போலந்து அரசினர் ருமேனியாவுக்கு தப்பினர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் சொபொபோர் என்ற இடத்தில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: டென்மார்க் யூதர்களை வெளியேற்ற ஹிட்லர் உத்தரவிட்டார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் ஜப்பானின் ஜூனியோ மாரு என்ற கப்பலைத் தாக்கியதில் டச்சு, ஆஸ்திரேலிய, பிரித்தானியப் போர்க்கைதிகள் உட்பட 5,600 பேர் கொல்லப்பட்டனர்.
1959 – வன்கார்ட் 3 பூமியைச் சுற்றிவர அனுப்பப்பட்டது.
1960 – பிடெல் காஸ்ட்ரோ ஐநா கூட்டத்தொடரில் பங்குபற்ற நியூயோர்க் நகரை அடைந்தார்.
1961 – ஐநாவின் பொதுச்செயலர் டாக் ஹமாஷெல்ட் கொங்கோவில் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்றபோது விமான விபத்தில் உயிரிழந்தார்.
1962 – ருவாண்டா, புருண்டி , ஜமெய்க்கா ஆகியன ஐநாவில் இணைந்தன.
1964 – வியட்நாம் மக்கள் இராணுவம் தென் வியட்நாமினுள் நுழைந்தது.
1968 – இந்திய உளவுத்துறை நிறுவனம் றா அமைப்பு உருவாக்கப்பட்டது.
1972 – இடி அமீனினால் விரட்டப்பட்ட முதல் தொகுதி உகாண்டா மக்கள் ஐக்கிய இராச்சியத்தை வந்தடைந்தனர்.
1974 – சூறாவளி ஹொண்டூராசைத் தாக்கியதில் 5,000 பேர் கொல்லப்ப்பட்டனர்.
1976 – பெய்ஜிங் நகரில் மா சே துங்கின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
1977 – வொயேஜர் 1 பூமியையும் சந்திரனையும் சேர்த்துப் படம் எடுத்தது.
1980 – சோயுஸ் 38 கியூபாவைச் சேர்ந்த விண்வெளி வீரருடனும் ஒரு ரஷ்யருடனும் விண்வெளி சென்றது.
1982 – லெபனானில் கிறிஸ்தவ துணை இராணுவத்தினர் 600 பாலஸ்தீனரைக் கொன்றனர்.
1988 – பர்மாவில் அரசியலமைப்பு நிறுத்திவைக்கப்பட்டது. மக்களாட்சிக்கு ஆதரவானோர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். 8888 எழுச்சி முடிவுக்கு வந்தது.
1990 – லிக்டன்ஸ்டைன் நாடு ஐநாவில் இணைந்தது.
1997 – 50.3 விழுக்காடு வேல்ஸ் மக்கள் சுயாட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2006 – கிழக்கிலங்கை, அம்பாறையில் 11 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2007 – மியான்மாரில் பௌத்த பிக்குகள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.

பிறப்புக்கள்

1709 – சாமுவேல் ஜோன்சன், ஆங்கில எழுத்தாளர் (இ. 1784)
1819 – லியோன் ஃபோக்கோ, பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. 1868)
1905 – கிரெட்டா கார்போ, சுவீடிய நடிகை (இ. 1990)
1979 – வினய், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

இறப்புகள்

1180 – ஏழாம் லூயி, பிரான்சின் மன்னன் (பி. 1120)
1783 – லியோனார்டு ஆய்லர், சுவிற்சர்லாந்து கணிதவியல் அறிஞர் (பி. 1707)
1945 – இரட்டைமலை சீனிவாசன், ஆதி திராவிடர் இயக்கத் தலைவர் (பி. 1859)
1961 – டாக் ஹமாஷெல்ட், சுவீடனைச் சேர்ந்த ஐநா பொதுச் செயலர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1905)
1966 – வித்துவான் க. வேந்தனார், ஈழத் தமிழறிஞர் (பி. 1918)
1967 – ஜோன் கொக்ரொஃப்ட், பிரித்தானிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1897)
1978 – ஆபிரகாம் கோவூர், பகுத்தறிவாளர், (பி. 1898)
2011 – டி. கே. கோவிந்த ராவ் கருநாடக இசைக் கலைஞர் (பி. 1929)

சிறப்பு நாள்

சிலி – விடுதலை நாள் (1810)

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி