கல்வி அல்லாத பிற பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் , ஆண்டில் 42 நாட்கள் மட்டுமே கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் - ஆய்வில் தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2018

கல்வி அல்லாத பிற பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் , ஆண்டில் 42 நாட்கள் மட்டுமே கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் - ஆய்வில் தகவல்!



நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், தங்கள் பணி நேரத்தில், ஆண்டுக்கு, 42 நாட்கள் மட்டுமே, மாணவ - மாணவியரின் கல்விக்கு செலவழிப்பதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அல்லாத பிற பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதே இதற்கு காரணம் என்றும், அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும், தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக மையம் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கல்வி உரிமை சட்டப்படி, அரசு பள்ளிகளில், 6 - 8 வரையுள்ள வகுப்புகளில், ஆசிரியர்கள், ஒரு ஆண்டுக்கு, 220 நாட்கள், கல்வி போதிக்க வேண்டும்.

ஆனால், 2015 - 16ம் ஆண்டில், 42 நாட்கள் மட்டுமே, கல்வி போதிக்கப்பட்டுள்ளது; இது, மொத்த கல்வி நாட்களில், 19 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள நாட்களில், தேர்தல் பணி, அரசுக்கு தேவையான ஆய்வுகளை நடத்துதல், போலியோ சொட்டு மருந்து முகாம், மதிய உணவு திட்டத்துக்கான பதிவேடுகளை பராமரித்தல் ஆகியவற்றை, ஆசிரியர்கள் செய்ய வேண்டி உள்ளது.அரசு ஆசிரியர்களின் பணி நேரத்தில், 81 சதவீதம், பிற பணிகளுக்காக செலவிடப்படுகிறது. இதில், 42.6 சதவீதம், தேர்தல் பணி போன்ற, கல்வி அல்லாத பணிகளில் செலவிடப்படுகிறது.

31.8 சதவீத நேரம், பள்ளி சார்ந்த, கல்வி அல்லாத பணிகளில் செலவிடப்படுகிறது.தேர்தல் சார்ந்த பணிகளில், ஆசிரியர்கள் பெருவாரியாக ஈடுபடுத்தப்படுகின்றனர். உயர்நிலைப் பள்ளிகளை விட, ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், அதிக நேரம், கல்வி அல்லாத பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி