பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் முற்றுகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2018

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் முற்றுகைபகுதி நேர சிறப்பாசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன் அனுமதி இல்லாமல் அங்கு கூடியதால் நுங்கம்பாக்கம் போலீசார் அவர்களை கலைந்து செல்லும் படி கூறினர். உரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசிய பின்பே போராட்டத்தை கைவிடுவது குறித்து முடிவெடுப்போம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா கூறியதாவது: கடந்த 2012ம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்டையில் 16,500 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார்கள்.

அதன்படி தமிழகம் முழுவதும் நேர்காணல் நடத்தி கிட்டத்தட்ட 14,500 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக மாதம் ஒன்றுக்கு ரூ.5500 சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர். ஊதிய உயர்வு எங்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. 2200 ஊதிய உயர்வு சேர்த்து தற்போது 7,700 நாங்கள் சம்பளம் பெற்று கொண்டிருக்கிறோம். ஆனால் பள்ளியில் கோடைகால விடுமுறையில் பணி இல்லை என்பதால் எங்களுக்கு சம்பளம் கிடையாது. தற்போது விற்கும் விலைவாசி அடிப்படையில் குறைந்த சம்பளத்தை வைத்து கொண்டு சிரமப்பட்டு வருகிறோம். இதனால் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இறந்துவிட்டனர்.தொடர்ந்து நாங்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டு வருகிறோம். 6, 7 ஆண்டுகளில் 10 கல்வி அமைச்சர்கள் மாறிவிட்டனர்.

அவர்களை சந்தித்து எங்கள் கோரிக்கையைசொல்லும் போதெல்லாம் செய்கிறோம் செய்கிறோம் என்று சொல்கிறார்களே தவிர யாரும் செய்யவில்லை. பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இதுபோன்ற தொகுப்பூதியத்தில் இருப்பவர்களுக்கு 16,500 சம்பள உயர்வு கொடுத்து பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.  ஆனால் தமிழகத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.முன்பு அதிமுக ஆட்சியில் 1996ல் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியனம் செய்யப்பட்ட ஆசிரியர்களாக இருந்து 2006 திமுக ஆட்சியில் 13500 பேரை பணி நிரந்தரம் செய்தனர். அதை முன் உதாரணமாக கொண்டு எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். தற்போதுள்ள கல்வி துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த போது நிதி ஆதாரமில்லை என்று சொன்னார்.

தற்போது, 12,500 பேர் பணியாற்றி வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனரை சந்தித்து மனு கொடுக்க போகிறோம். உறுதி மொழி அளிக்காவிட்டால் தொடர்ந்து நாங்கள் இந்த வளாகத்தில் இரவு பகலாக போராட்டத்தை தொடர உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

20 comments:

 1. Pgtrb 2017 chemistry dpt case enna achii nnu theriyala ......court judgment ah mathikkala...

  ReplyDelete
 2. ஒன்று, பகுதிநேர ஆசிரியர்களை நிரந்திரமாக்குங்கள் (அ) வீட்டுக்கு அனுப்புங்கள் .அவர்களின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்.

  ReplyDelete
 3. Todays our TN government thinking unemployed teachers all are fool we will playing game well. Every day they forgot their commitment on last days. I think all commitments our honorable education minister with nattu sarakku?????

  ReplyDelete
 4. வாழ விடு அல்லது சாக விடு

  ReplyDelete
 5. வாழ விடு அல்லது சாக விடு

  ReplyDelete
 6. பகுதி நேர ஆசிரியர்கள் தலை எழுத்தை மாற்றுமா? தமிழக அரசு?

  ReplyDelete
 7. பகுதி நேரம், தகுதி தேர்வு இதற்கெல்லாம் அர்த்தம் தெரிந்தால் போராட மாட்டார்கள்

  ReplyDelete
 8. எங்களுக்கு எல்லாம் தெரியும். நீ பேசுவதை பார்த்தா அந்த காசு கொடுத்த ஆள் நீதான் போல.

  ReplyDelete
 9. நாங்களும் தகுதி தேர்வு எழுதினவங்கதான். உங்களால் நல்லது செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை கெடுதல் செய்ய வேண்டாம்.

  ReplyDelete
 10. Sorry ஆனால் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் எல்லா பிரச்சனையும் சரியாகி விடும் அது யாருடைய வேலை. வேலை கிடைத்தவர்களும் போராடுகிறார்கள் போராட்டம் போராட்டம் என்றால்...

  ReplyDelete
 11. பாதுகாப்பாக இருப்பவர்கள் மேலும் பாதுகாப்பை எதிர்பார்ப்பதினால் மற்றவர்களுக்கு பிரச்சனை

  ReplyDelete
 12. போராட்டம் நடத்துபவர்கள் மனம் புண்படும்படி தயவு செய்து பேச வேண்டாம் நண்பர்களே

  ReplyDelete
 13. Part time teachers read thier appointment letter and terms and conditions .....and agreed their formalities during appointment period.....

  ReplyDelete
 14. வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 15. அனைவரும் பணம் தந்து தான் மதிப்பெண் பெற்றார்கள் என்று சொல்வது தவறு நீங்கள் படித்து 85 மதிப்பெண் பெற்று விட்டேன் என் பெயர் ஏன் வரவில்ல என்று OMR சீட்டுடன் சென்று வழக்கு பேட்டால் அது சரியான முறை ஆனால் தானும் படிக்கக் கூடாது மதிப்பெண் வாங்கியவர்களையும் வாழவிடக்கூடாது என்பது ஓர் ஆசிரியர் செய்யும் வேலை அல்ல

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி