நீட் பயிற்சிக்கு தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2018

நீட் பயிற்சிக்கு தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை


 தமிழகம் முழுவதும் 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் இன்று மாலை முதல் செயல்பட தொடங்கும் என்று நெல்லையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார்.

  நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவு என்றும், 412 மையங்களில் 3200 ஆசிரியர்கள் காணொலியில் பயிற்சி அளிப்பார்கள் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளி கல்வித்துறை சார்பாக ரூ.4 கோடி நிவாரண பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து குறைந்த பட்சம் ஆயிரம் மருத்துவ மாணவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தெரிவித்திருந்தார்.

நீட் பயிற்சிக்கு தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. பெண் ஆசிரியர்கள், பாலியல் ரீதியான புகார்களுக்கு 14417 என்ற இலவச எண்ணிற்கு தகவல் கொடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி