புதிய பாடத்திட்ட புத்தகம் எழுதியதற்கு ஊதியம் ஆசிரியர்களுக்கு கிடைக்குமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2018

புதிய பாடத்திட்ட புத்தகம் எழுதியதற்கு ஊதியம் ஆசிரியர்களுக்கு கிடைக்குமா?


புதிய பாடத்திட்ட புத்தகம் எழுதியவர்களுக்கு, உரிய தொகை வழங்காததால், அப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி துறை சார்பில், 1 முதல் பிளஸ்2 வரையிலான வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம், இந்த ஆண்டு அமலுக்கு வந்துள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, அடுத்த கல்வியாண்டில் அமலாகிறது. அதற்கும் சேர்த்து, புதிய புத்தகங்கள் எழுதும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணியை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில், பேராசிரியர்களும், ஆசிரியர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து, புத்தகம் எழுதும் ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:இந்த பணியில், அனுபவமும், நிபுணத்துவமும் பெற்ற ஆசிரியர்கள் பணியாற்றுகிறோம். இரவு, பகல் பாராமல் பாடங்களை எழுதிஉள்ளோம். இதற்காக, பல்வேறு புத்தகங்களையும், தரவுகளையும் ஆய்வு செய்து வருகிறோம்.ஆனால், ஆசிரியர்களுக்கான உழைப்பூதியமோ, தனி சம்பளமோ வழங்கப்படவில்லை. தினமும், 500 முதல், 1,000 ரூபாய் சம்பளம் நிர்ணயித்து, கையெழுத்து மட்டும் பெற்றுஉள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு புத்தகம் எழுதும் பணியில் ஈடுபட்டதற்கே, இன்னும் சம்பளம் வழங்கவில்லை.ஆசிரியர்கள், தங்களின் பள்ளி வேலை நேரம் போக, மற்ற நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும், இதில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு உரிய கவுரவமும், ஊக்கமும் அளிக்க வேண்டிய நிலையில், ஊதியமோ, செலவு தொகையோ கூட வழங்காமல் இருப்பது, வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 comment:

  1. ஆசிரியர் பணியே அறப்பணி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி