மாணவர்களுக்கு விரைவில் அதிநவீன, 'லேப்டாப்' - யார் யாருக்கு கிடைக்கும்? - kalviseithi

Sep 27, 2018

மாணவர்களுக்கு விரைவில் அதிநவீன, 'லேப்டாப்' - யார் யாருக்கு கிடைக்கும்?பள்ளி மாணவர்களுக்காக, 'வெப் கேமரா, வைபை' என, நவீன வசதி களுடன், 15.66 லட்சம், 'லேப்டாப்'கள் வாங்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டு உள்ளன.

15.66 லட்சம், மாணவர்களுக்கு, விரைவில், அதிநவீன, 'லேப்டாப்' தமிழகத்தில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழக அரசின் சார்பில், இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. வழங்க முடிவுஇதற்கான பணிகளை, பள்ளி கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, இன்னும் லேப்டாப் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், 2017-18ல் படித்த மாணவர்களுக்கு மட்டுமின்றி, நடப்பு கல்வி ஆண்டில்,பிளஸ் 1, பிளஸ் 2 படிப்போர் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும், இந்த ஆண்டிலேயே, லேப்டாப் வழங்க, பள்ளி கல்வித் துறை முடிவுசெய்துள்ளது.இதற்காக, இந்திய தர நிர்ணய ஆணைய அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம், 15.66 லட்சம் லேப்டாப்கள் வாங்கப்பட உள்ளன. அதற்கான கொள்முதல் நடவடிக்கைகள், 'எல்காட்' என்ற, தமிழக அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் வாயிலாகதுவக்கப்பட்டுள்ளன.

நவீன வசதி

வெப் கேமரா, வைபை, ப்ளூடூத் வசதி, தமிழ்மொழிக்கான யூனிகோட் கீ போர்ட், 500 ஜி.பி., தகவல்களை சேகரிக்கும் வசதியுள்ள ஹார்ட் டிஸ்க்,டி.டி.ஆர்., - 4 வகை ரேம் போன்ற தொழில் நுட்பங்களுடன், லேப்டாப்கள் வாங்கப்படுகின்றன.

லேப்டாப்களில், மாணவர்களின் உயர்கல்விக்கான அம்சங்கள், தமிழக அரசின் கல்வி திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்களை பதிவேற்ற உத்தர விடப்பட்டுள்ளது.அதேபோல, 'விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், லினக்ஸ்' என்ற, இரண்டாவது ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இணைக்கப்படுகிறது. இதனால், இன்ஜினியரிங், மருத்துவம் போன்ற உயர்கல்வியிலும், இந்த லேப்டாப்களைபயன்படுத்த முடியும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

யார் யாருக்கு கிடைக்கும்?

கடந்த ஆண்டில், பிளஸ் 2 படித்த, 4.72 லட்சம் மாணவர்கள்; 12 ஆயிரத்து, 663 ஐ.டி.ஐ., மாணவர்கள்;இந்த ஆண்டு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும்,10.66 லட்சம் பேர்; பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படிக்கும், 13 ஆயிரத்து, 679 பேருக்கு, லேப்டாப் வழங்க, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி