தமிழகத்தில் சிறந்த மாணவர் சேர்க்கை கொள்கைகள் உள்ளன : உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து - kalviseithi

Sep 26, 2018

தமிழகத்தில் சிறந்த மாணவர் சேர்க்கை கொள்கைகள் உள்ளன : உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து

தமிழகத்தில் சிறந்த மாணவர் சேர்க்கை கொள்கைகள் உள்ளன என உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர ராவ் கருத்து தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு குளறுபடி காரணமாக 196 கருணை மதிப்பெண்கள் வழங்கக்கோரி தொடரப்பட்ட மனுவின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர் மனிந்தர் சிங், எந்த ஒரு பொதுத்தேர்வையும் அனுமதிக்க கூடாது என்ற மனநிலையில் தமிழக அரசு உள்ளதாக குற்றம் சாட்டினார். ஆனால் மனிந்தர் சிங்கின் இந்த வாதத்தை ஏற்க நீதிபதி நாகேஷ்வர ராவ் மறுத்துவிட்டார்.

பொதுவாக தமிழக அரசின் செயல்பாட்டை இவ்வாறு கூறுவதை தன்னால் ஏற்க இயலாது எனவும் அவர் தெரிவித்தார். தான் தமிழக அரசு வழக்குகளை நிறைய வாதாடியிருப்பதாகவும், தமிழகத்தின் கல்வி கொள்கைகள் தனக்கு நன்றாக தெரியுமென்றும் அவர் கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் தமிழகம் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தால்தான் நீட் தேர்வை தமிழக அரசு எதிர்க்கிறது என்றும் நீதிபதி நாகேஷ்வர ராவ் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பான பிரமாண பத்திரத்தை அக்டோபர் 9ம் தேதிக்கு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

1 comment:

  1. அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் கொடுக்க நிதி நெருக்கடி இருக்காது. அதை வாங்கி சீமராஜா படத்துல சொல்ற மாதிரி படம் பார்க்க மட்டுமே பயன்படுத்துறாங்க. ஆனால் கம்ப்யூட்டர் சொல்லி தரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிதி இருக்காது. கம்ப்யூட்டர் டீச்சர் ஸ் ஆன்லைன் வேலை எவ்வளவு பாக்குறாங்கன்னு விசாரிச்சு அப்புறம் மைக் ல பேச சொல்லுங்க. 2 மணி நேரம்னு எப்படி பொய் சொல்ல முடியாது?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி