மானியம் நிறுத்தப்பட்ட அரசு பள்ளிகள் மூடப்படுகிறதா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2018

மானியம் நிறுத்தப்பட்ட அரசு பள்ளிகள் மூடப்படுகிறதா?


தமி­ழகம் முழு­வ­தும் 15 மாண­வர்­க­ளுக்கும் குறை­வாக மாண­வ­ர்கள் உள்ள 3 ஆயிரம் அர­சுப்­பள்­ளி­களுக்கு பரா­ம­ரிப்பு மானியம் நிறுத்­தப்­பட்­டுள்­ளதால் ஆசி­ரி­யர்கள் அதிர்ச்­சி அடைந்­துள்­ள­னர்.

எஸ்.ஏ.பி. முழு சுகா­தாரத் தமி­ழகம் என்ற திட்­டத்தில் அர­சுப்பள்­ளி­க­ளுக்கு ஒருங்­கி­ணைந்த மானி­யம் வழங்க இந்த ஆண்டு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

*15 மாண­வர்­க­ளுக்கு குறை­வாக உள்ள பள்­ளி­க­ளுக்கு மானியம் கிடை­யாது. 15–100 மாண­வர்கள் உள்ள பள்­ளிக்கு 25 ஆயிரம் ரூபாய், 101–250 மாண­வர்கள் உள்ள பள்­ளிக்கு 50 ஆயி­ரம் ரூபாய், 251–1000 மாணவர்கள் உள்ள பள்­ளி­க­ளுக்கு 75 ஆயிரம் ரூபாய், 1001க்கு மேல் மாண­வர்கள் உள்ள பள்­ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரா­ம­ரிப்பு மானியம் வழங்­கப்­ப­டு­கி­ற­து

*இத்­தொ­கையை கழிப்­பறைகள் சீர­மைப்­­பு, குடிநீர் வசதி, குடிநீர்த் தொட்டி பழுது பார்த்­தல், முட்­பு­தர்­களை அகற்­று­­தல், கல்வி, விளை­யாட்டு உபக­ர­ணங்­களை வாங்­குதல் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சியப் பணி­க­ளுக்கு செல­விட அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­து. 2019ம் ஆண்­டு ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலவு, பயன்­பாட்டுச் சான்று அளிக்ககெடு விதிக்­கப்பட்­டுள்­ள­து

*மாண­வ­ர்கள் எண்ணிக்கை 15க்கு குறை­வாக உள்­ளதால் மாநிலம் முழு­வதும் 3 ஆயிரம் பள்­ளிக­ளுக்கு மானியம் வழங்­கப்­ப­ட­வில்லை

*இதனால் ஆசி­ரி­யர்கள் அதிர்ச்சி அடைந்துள்­ளனர். அந்­தப் பள்­ளி­கள் விரைவில்மூடப்­பட்டு விடும் என தகவல் பரவி வரு­கி­ற­து

*இதுகுறித்து தமி­ழ்­நாடு ஆரம்­பப்­பள்­ளி ஆசி­ரியர் கூட்­டணி, மாவட்­டச்­செ­ய­லாளர் பால்ராஜ், தலைவர் ராஜ்­குமார் கூறி­ய­தா­வ­து

*தமி­ழகம் முழு­வதும் 3 ஆயிரம் அர­சுப்பள்­ளி­க­ளுக்கு பரா­ம­ரிப்பு மானியம் விடு­விக்­கப்­ப­ட­வில்லை

*நெல்லை மாவட்­டத்தில் 1,492 துவக்­கப்­பள்­ளிகள், 419 நடு­நி­லைப்­பள்­ளிகள் என மொத்தம் 1,911 பள்­ளிகள் உள்­ளன. அவற்றில் 70 க்கும் மேற்­பட்ட பள்­ளி­களில் 15 க்கும் குறை­வான மாண­வர்கள் உள்­ளனர்

*மானி­யம் விடு­விக்­கப்­ப­டாத 3 ஆயிரம் பள்­ளிகள் மூடப்­ப­டுமோ என கல்­வி­யா­ளர்கள் மத்­தியில் சந்­தேகம் எழுந்­துள்­ளது. மாண­வர்கள் எண்­ணிக்­கையை காரணம் காட்டி3 ஆயிரம் பள்­ளி­க­ளுக்கு நிறுத்தி வைத்த மானி­யத்தை உடனே வழங்க வேண்­டும்**இவ்வாறு அவர்கள் கூறினர்.

நெல்லை மாவட்­டத்தில் 70க்கும் மேற்­பட்ட பள்­ளி­க­ளுக்கு மானியம் நிறுத்­தப்­பட்­டுள்­ளதால் கிராமப்­ப­குதி மாணவ, மாண­விகள் பாதிக்­கப்­படும் நிலை ஏற்­பட்­டுள்­ள­து.

4 comments:

 1. Gadham.. .
  gadham...
  b.ed....
  wooooooooo....

  ReplyDelete
 2. தமிழகத்தில் ஒரு பள்ளியையும் மூட முடியாது மூடினால் போராட்டம் பயங்கரமாக வெடிக்கும்

  ReplyDelete
 3. b.ed padichavana than kozhaparaanu paatha +1 +2 padikaravanayum kozhaparaan ...
  padikadha medhaiku padipin Arumai epadi theriyume?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி