ஒருமுறை நீட் தேர்வில் விலக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு - kalviseithi

Sep 28, 2018

ஒருமுறை நீட் தேர்வில் விலக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு


ஏ.ஜே. கல்வி அறக்கட்டளை உதவியுடன் ஷாகுல் ஹமீது உள்ளிட்ட 57 பேருக்கு ரஷ்யாவில் உள்ள ஸ்டாவ்ரோபோல் அரசு மருத்துவ பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது.

இதையடுத்து, இவர்கள் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதிடெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், “இந்த ஆண்டில் வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர நீட் தேர்வில் இருந்து ஒரு முறை விலக்கு அளிக்க வேண்டும்” என கோரியிருந்தனர்.

இந்த மனுவை பரிசீலித்த நீதி மன்றம், இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும்இந்திய மருத்துவ கவுன்சிலை அணுகுமாறு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், மனுதாரர் கள் சுகாதார அமைச்சகம், மருத்துவ கவுன்சில் மற்றும் சில எம்.பி.க்களை (அன்வர் ராஜா, பி.ஆர்.சுந்தரம்) அணுகினர். இதையடுத்து அவர்களுக்கு அனுமதி கிடைத்தது.

இதுகுறித்து ஏ.ஜே. அறக் கட்டளை இயக்குநர் ஏ.நஜீருல் அமீன் கூறும்போது, “டெல்லி உயர் நீதிமன்றம் மாணவர்களுக்கு ஆதரவாக நீதி வழங்கியது. இவர் களுக்கு 2018-ம் கல்வி ஆண்டில் வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிக்க ஒரு முறை மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி