ஓவியம் மற்றும் சிற்ப கண்காட்சியை நடத்த, அரசு, 5 லட்சம் ரூபாய் ஒதுக்கி உள்ளது.தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை, ஓவியர்கள் மற்றும் சிற்பிகளின் தனித்திறமையை வெளிப்படுத்த, கண்காட்சியை நடத்தவுள்ளது.இதில், தனிநபர் மற்றும் குழுவினர் பங்கேற்கலாம். தனி நபருக்கு, 25 ஆயிரம் ரூபாய்; குழுவிற்கு, 50 ஆயிரம் ரூபாய் என, 5 லட்சம் ரூபாய் வரை, நிதியுதவி அளிக்கப்பட உள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் ஓவியர்கள் மற்றும் சிற்பிகள், தங்களின் முழு விபரங்களுடன், நவ., 12க்குள், 'ஆணையர், கலை பண்பாட்டுத் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர் - 08' என்ற முகவரிக்கு, விண்ணப்பங்களை அனுப்பலாம்.
விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டல் விவரங்கள் வெளியீடு செய்ய வேண்டும்.
ReplyDeleteவிண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டல் விவரங்கள் வெளியீடு செய்ய வேண்டும்.
ReplyDelete