அக்டோபர் 25 (October 25) கிரிகோரியன் ஆண்டின் 298 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 299 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 67 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1147 – முதலாம் அஃபொன்சோ தலைமையில் போர்த்துகீசர் லிஸ்பன் நகரைப் பிடித்தனர்.
1415 – அஜின்கோர்ட் நகரில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றியின் படைகள் பிரான்சைத் தோற்கடித்தனர்.
1616 – அவுஸ்திரேலியாவில் கால்பதித்த இரண்டாவது ஐரோப்பியர் டச்சு கப்டன் டேர்க் ஹார்ட்டொக். மேற்கு அவுஸ்திரேலியாவில் டேர்க் ஹார்ட்டொக் தீவு அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
1760 – மூன்றாம் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னனானான்.
1900 – ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிக்காவின் டிரான்ஸ்வால் மாநிலத்தை இணைத்துக்கொண்டது.
1917 – ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி), இடம்பெற்றது. போல்ஷெவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர்.
1918 – அலாஸ்காவில் பிரின்சஸ் சோஃபியா என்ற கப்பல் தாண்டதில் 353 பேர் கொல்லப்பட்டனர்.
1924 – இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ் பிரித்தானியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
1935 – எயிட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
1936 – ஹிட்லர் மற்றும் முசோலினி இணைந்து ரோம்-பேர்லின் அச்சு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் வரலாற்றில் பெரும் கடற்சமர் இடம்பெற்றது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கூட்டு நாடுகளிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து சீனக் குடியரசு தாய்வானை இணைத்துக் கொண்டது.
1973 – இசுரேல்-எகிப்து இடையல் நடைபெற்ற யோம் கிப்பூர்ப் போர் முடிவுற்று சீனாய் இடைக்கால உடன்படிக்கைக்கு வழிநடத்தியது.
1971 – ஐநாவிலிருந்து சீனக் குடியரசு வெளியேற்றப்பட்டு மக்கள் சீன குடியரசு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1983 – ஐக்கிய அமெரிக்காவும் அதன் கரிபியன் கூட்டு நாடுகளும் கிரெனாடாவை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றின.
1991 – யூகொஸ்லாவிய இராணுவம் சிலவேனியாவில் இருந்து முற்றாக வெளியேறியது.
1995 – கொழும்பு கொலன்னாவை எண்ணெய்க் குதங்களில் இடம்பெற்ற பெரும் தீயில் 21 படையினர் கொல்லப்பட்டனர்.
2000 – பிந்துனுவேவா படுகொலைகள்: இலங்கையில் பண்டாரவளை, பிந்துனுவேவா சிறைகள் மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதலில் தமிழ் அரசியல் கைதிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
2001 – விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது.
2001 – இந்தியாவில் தடா சட்டத்துக்கு பதிலாக POTO என்ற புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 23 தீவிரவாத அமைப்புகளுக்கு நடுவண் அரசு தடை விதித்தது.
2007 – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதலாவது இரட்டை அடுக்கு விமானம் ஏர்பஸ் ஏ380 தனது முதலாவது சேவையை சிட்னிக்கு ஆரம்பிக்கிறது.
பிறப்புக்கள்
1811 – எவரிஸ்ட் கால்வா, பிரெஞ்சு கணிதவியலர் (இ. 1832)
1881 – பாப்லோ பிக்காசோ, ஸ்பானிய ஓவியர், சிற்பி (இ. 1973)
1973 – றசல் பிரேமகுமாரன் ஆர்னோல்ட், இலங்கை துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
1400 – ஜெஃப்றி சோசர், ஆங்கில இலக்கிய மேதை. (பி 1340)
2005 – நிர்மல் வர்மா, ஹிந்தி எழுத்தாளர் (பி. 1929)
1980 – ஸாகிர் லுதியானவி, ஹிந்தித் திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1921)
சிறப்பு நாள்
கசக்ஸ்தான் – குடியரசு நாள் (1990)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி