அரசு பள்ளி மாணவியின் சாதனை புகைப்படம் 6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2018

அரசு பள்ளி மாணவியின் சாதனை புகைப்படம் 6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில்!


டேக்வாண்டோவில் சாதனை: 6ம் வகுப்பு புத்தகத்தில் இடம்பிடித்த மாணவி

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருபவர் ராஜமாணிக்கம்(16). கடந்த ஆண்டு மாநில அளவில் 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான டேக்வாண்டோ போட்டியில் 40 முதல் 42 கிலோ எடைபிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். கடந்த ஆண்டே இதேபிரிவுகளில் தேசிய அளவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதுபோன்று மாநில, மண்டல, மாவட்டஅளவில் பல்வேறு பதக்கங்களை குவித்துள்ளார்.நடப்பு 2ம் பருவத்திற்கு தமிழ்நாடு பாடநூல் கழகத்தால், வழங்கப்பட்டுள்ள 6ம்வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில், கடந்த ஆண்டு விளையாட்டுத்துறையில் சாதனையாளர்களுக்கான பக்கத்தில் டேக்வாண்டோ போட்டியில் 19 வயதிற்குட்பட்ட 40-42கிலோ எடைப்பிரி வில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனைபடைத்துள்ள ராஜமாணிக்கத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.தான் படிக்கும் காலத்தில் தன்னோடு படிக்கும் மாணவ,மாணவிகள் தன்னைப் பற்றியும் பாடம் படிப்பதுமாணவி ராஜமாணிக்கத்திற்கும், அந்த பள்ளிக்கும், ராஜமாணிக்கத்தின் பெற்றோருக்கும் பெருமையாக அமைந்துள்ளது.

பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற மாணவி ராஜமாணிகத்திற்கு பெரம்பலூர் கலெக்டர் சாந்தா, எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி