சர்வதேச அளவில் 'இன்டர்நெட்' தடை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2018

சர்வதேச அளவில் 'இன்டர்நெட்' தடை?



'அடுத்த, 48 மணி நேரத்துக்கு, இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும், 'சர்வர்'களில், பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சர்வதேச அளவில், 'இன்டர்நெட்' பயன்படுத்துவது, சிக்கலானதாக இருக்கும்' என, தகவல் வெளியாகி உள்ளது.

இணையதளத்தை நிர்வகிக்கும் ஐ.சி.ஏ.என்.என்., எனப்படும், 'தி இன்டர்நெட் கார்ப்பரேஷன் ஆப் சைன்டு நேம்ஸ் அண்டு நம்பர்ஸ்' அமைப்பு, சர்வர்களில் இருக்கும், 'கிரிப்டோ கிராபிக் கீ'-யை மாற்ற உள்ளது.

இந்த கீ தான், இணையதளத்தை பாதுகாப்பாக வைத்து இருக்கஉதவுகிறது.சர்வதேச அளவில், சைபர் கிரைம்கள் அதிகமாக நடக்கும் நிலையில், இந்த நடவடிக்கையை எடுக்க, ஐ.சி.ஏ.என்.என்., முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது குறித்த தகவலை, 'ரஷ்யா டுடே' என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சி.ஆர்.ஏ., எனப்படும், தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்த பராமரிப்பு பணி, சர்வதேசஅளவில், இணையதளத்தை பாதுகாப்பாக வைத்திருக்க மிகவும் அவசியமானது. இந்த பணி காரணமாக, அடுத்த, 48 மணி நேரத்தில், சர்வதேச அளவில், பல பயனாளர்களின் இணையதள சேவை முடங்க வாய்ப்பு உள்ளது.

பயனாளர்களுக்கு, இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பாதிப்பு அதிகமாக இருக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி