அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2018

அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்புஅடுத்த இரு தினங்களுக்கு சென்னையில் விட்டு விட்டு மழைபெய்யும், தமிழகத்தை பொறுத்தவரை இரவு நேரங்களில் அதிகமழையும், பகல் நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்பகுதியில் காற்று சுழற்சி வடக்கு தமிழகம் நோக்கி நகர்ந்து செலவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார். இன்று மற்றும் நாளை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு தமிழகம் கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி,ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி