தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவ காணொலிக் குறுந்தகடுகள் ( தமிழ் வழி ) வழங்கப்படுகின்றன. இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் ( கணிதம் தவிர ) வீடியோவாக மாற்றப்பட்டுள்ளன. பாடல்கள் , பாடங்கள் அனைத்தும் வரிவிடாமல் வீடியோவாக மாற்றப்பட்டுள்ளதால் கற்பித்தல் எளிதாகிறது. மேலும் இக்குறுந்தகடுகள் சிறந்த கற்றல்-கற்பித்தல் உபகரணமாகவும் உள்ளன. வார்த்தைகளால் விளக்க முடியாத அனைத்துப் பாடக் கருத்துகளும் வீடியோ மூலம் விளக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு எளிதில் புரியவைக்க முடிகிறது. ஆங்கிலப் பாடங்களுக்கு பாட வரிகளும் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளதால் வாசிப்புத்திறன் மேம்படுகிறது. இக்குறுந்தகட்டில் Menu கொடுக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர், தான் நடத்தவேண்டிய பாடத்தை தேர்வு செய்து நடத்தலாம். ஒருமுறை பாடத்தை நடத்திய பின் பலமுறை இக்காணொலியைக் காண்பித்து மாணவர்களுக்கு நினைவூட்டலாம். மாணவர்களின் கற்றலை மேலும் வலுவூட்ட இக்குறுந்தகடுகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் துணை செய்யும்.
வீடியோ உருவாக்கம் - இரா.குருமூர்த்தி, இடைநிலை ஆசிரியர், தொட்டியம் ஒன்றியம், திருச்சி மாவட்டம்.
குறுந்தகடுகள் விரும்புவோர் தொடர்புகொள்ளவேண்டிய அலைபேசி எண்கள் - 9791440155, 9600827648.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி