ஆசிரியர் பணியிடங்கள் ரத்து : இயக்குனரகம் புது உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2018

ஆசிரியர் பணியிடங்கள் ரத்து : இயக்குனரகம் புது உத்தரவு


அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், மாணவர்குறைவாக உள்ள இடங்களில், ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் - ஆசிரியர் விகிதப்படி,மாணவர் எண்ணிக்கையை விட, அதிக ஆசிரியர்கள் உள்ளனர். குறிப்பாக, 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் இருக்க வேண்டிய நிலையில், பல பள்ளிகளில், 35 மாணவர்களுக்கு, இரண்டுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர்.இதையடுத்து, அதிகமாக உள்ள ஆசிரியர்கள், அங்கிருந்து மாற்றப்பட்டு, தேவை உள்ள பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர்.ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில், இதுபோன்ற இடமாறுதல் செய்ய முடியவில்லை.எனவே, உபரியாக ஆசிரியர்கள் உள்ள, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது, அந்த பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓய்வுபெறுவோர் பணியிடத்தில் புதியவர்களை நியமிக்காமல், அரசிடம் ஒப்படைக்குமாறு, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

4 comments:

 1. ஓய்வுபெறுவோர் பணியிடத்தில் புதியவர்களை நியமிக்காமல், அரசிடம் ஒப்படைக்குமாறு, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார் idu kattayamakkaada vendum

  ReplyDelete
 2. ஓய்வுபெறுவோர் பணியிடத்தில் புதியவர்களை நியமிக்காமல், அரசிடம் ஒப்படைக்குமாறு, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார் idu kattayamakkaada vendum

  ReplyDelete
 3. அரசு உதவி பெறும் பள்ளியில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசுப் பள்ளியில் பணி வழங்கி அவர்களது வாழ்க்கையில் ஒளி ஏற்றலாமே!

  ReplyDelete
 4. அமுதசுரபி பயிற்சி மையம்
  PG TRB தமிழ்
  கிருஷ்ணகிரி
  Cell: 9952448373

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி