புதுக்கோட்டை,அக்24- படைப்பாற்றலை வளர்க்கக்கூடிய கலைவிழாப்போட்டிகளில் அதிக அளவு மாணவர்கள் பங்கேற்கவேண்டும் முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேசினார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின் மூலம் கல்வி மாவட்ட அளவிலும்,வருவாய் மாவட்ட அளவிலும் இரண்டு நாட்கள் கலா உத்சவ் 2018 கலைவிழாப்போட்டிகள் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள்,மெட்ரிக்பள்ளிகளில் 9,10,11,12 வகுப்புகள் பயிலும் மாணவர்கள் பங்கேற்கக்கூடிய ஆண்களுக்கும்,பெண்களுக்கும் தனித்தனியே நடத்தப்படுகிற வாய்ப்பாட்டு,நடனம்,இசைக்கருவி,ஓவியம்,ஆகியவற்றை உள்ளடக்கிய இப்போட்டியானது மிகவும் சிறப்பானதாகும்.மாணவர்களின் படைப்பாற்றலை வளர்ப்பதும் பாரம்பரிய ,செவ்வியல்,நாட்டுப்புற தற்காலக்கலைகளை உயிர்ப்புடன் பாதுகாத்து வளர்ப்பதற்குமான நோக்கங்களுக்காக நடத்தப்படுகிற இப்போட்டியில் அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்று கல்வி மாவட்ட அளவிலும்,வருவாய் மாவட்ட அளவிலும்,மாநில அளவிலும் வெற்றி பெற்று உங்களின் தனித்திறமையினை வளர்த்துக்கொள்ளவேண்டும்.குறிப்பாக வருவாய் மாவட்ட அளவில் வெற்றி பெற்று முதலிடத்தினைப் பெறுவோர் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமைச்சேர்க்கவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற ஆண்களுக்கான வாய்ப்பாட்டு போட்டியில் காரையூர் எம்.ஏ.கே அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஏ.நவீன் முதலிடத்தினையும்,கொடும்பாளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஏ.பாலசுப்பிரமணி இரண்டாம் இடத்தினையும்,ஒத்தப்புளிக்குடியிருப்பு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.மணிகண்டன் மூன்றாம் இடத்தினையும் பிடித்தனர். பெண்களுக்கான வாய்ப்பாட்டு போட்டியில் சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.கீர்த்தனா முதலிடத்தினையும்,புத்தாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.மகமாயி இரண்டாம் இடத்தினையும்,நச்சாந்துப்பட்டி இராமநாதன் செட்டியார் பள்ளி மாணவி டி.ஜமுனாராணி மூன்றாம் இடத்தினையும் பிடித்தனா். ஆண்களுக்கான நடனப்போட்டியில் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவர் மு.சார்லிகண்ணன் முதலிடத்தையும் ,கீரனூர் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெ.ஜெயசூரியா இரண்டாம் இடத்தினையும்,அரிமளம் சிவகமலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் இராம.ஆனந்தகிஷோர் மூன்றாம் இடத்தினையும் பிடித்தனர்.பெண்களுக்கான நடனப்போட்டியில் கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.சங்கமித்ரா முதலிடத்தினையும்,புதுக்கோட்டை மௌண்ட்சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வெ.சிவரஞ்சனி இரண்டாம் இடத்தினையும்,கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சு.ரேணுகா மூன்றாம் இடத்தினையும் பிடித்தனர்.ஆண்களுக்கான இசைக்கருவி போட்டியில் கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஏ.கலையரசன் முதலிடத்தினையும்,கீழக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஏ.சாலைகலாநிதி இரண்டாம் இடத்தினையும்,புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர் கே.தன்வந்திரி மூன்றாம் இடத்தினையும் பிடித்தனர்.பெண்களுக்கான இசைக்கருவிப்போட்டியில் புதுக்கோட்டை கற்பகவிநாயகா பள்ளி மாணவி வி.ஹர்ஷினி முதலிடத்தினையும்,புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவி ஜி.சகானா இரண்டாம் இடத்தினையும், குளத்தூர் முத்துசுவாமி வித்யாலயா மெட்ரிக்பள்ளி மாணவி வி.பவித்ரா மூன்றாம் இடத்தினையும் பிடித்தனர்.ஆண்களுக்கான ஓவியப்போட்டியில் புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர் பி.அருண்குமார் முதலிடத்தினையும்,அரசர்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.ஹரிராஜ் இரண்டாம் இடத்தினையும்,ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் மா.ஸ்ரீநிலவன் மூன்றாம் இடத்தினையும் பிடித்தனர்.பெண்களுக்கான ஓவியப்போட்டியில் குழிபிறை எம்.சி.டி.ஆர்.எம் பள்ளி மாணவி ஏ.அனிதா முதலிடத்தினையும், புதுக்கோட்டை திருஇருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ.நிவேதா இரண்டாம் இடத்தினையும்,கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஷ.சபாஆயிஷா மூன்றாம் இடத்தினையும் பிடித்தனர். கல்வி மாவட்ட அளவிலும்,வருவாய் மாவட்ட அளவிலும் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. வருவாய் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.போட்டிக்கான ஏற்பாடுகளை முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா அவர்களின் வழிகாட்டலில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு தலைமையில் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இராசி.பன்னீர்செல்வம்,ஜி.ராஜா ஆகியோர் செய்திருந்தனர்...
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி