அங்கன்வாடி குழந்தைகளுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும் : பள்ளிக்கல்வி துறை புதிய முயற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2018

அங்கன்வாடி குழந்தைகளுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும் : பள்ளிக்கல்வி துறை புதிய முயற்சி


தமிழகம் முழுவதும், 2,000 அங்கன்வாடிகளில், எல்.கே.ஜி., -- யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.தமிழகத்தில், பள்ளி கல்வி துறையில், பல்வேறு மாற்றங்களை அமைச்சர், செங்கோட்டையன் ஏற்படுத்தி வருகிறார்.

மத்திய அரசின் நிதியுதவியுடன், தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா, ஒரு மாதிரி பள்ளி அமைக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., துவங்க, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த திட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள, 2,000 அங்கன்வாடிகளில், இந்த கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. அங்கன்வாடிகளில், மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், எல்.கே.ஜி., என்றும், நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், யு.கே.ஜி., என்றும் வகைப்படுத்தப்படுவர்.அங்கன்வாடிகளில் உள்ள இந்த குழந்தைகளுக்கு, தொடக்க பள்ளி ஆசிரியர்கள் சென்று, தினமும், இரண்டு மணி நேரம், கே.ஜி., பாடத்திட்டத்தை நடத்துவர்.

இதற்காக, மாவட்டம் தோறும் உள்ள அங்கன்வாடிகளின் பட்டியலை, சமூக நலத்துறையுடன் இணைந்து, கணக்கெடுக்கும் பணியை, தொடக்கக் கல்வி துறையினர் துவக்கியுள்ளனர்.

12 comments:

  1. சூப்பரப்பு .... இப்படியே போனா நாடு எங்கேயோ போய்டும்

    ReplyDelete
  2. Ippo tet 1 paper pass pannavungala podunga sir

    ReplyDelete
  3. அங்கன்வாடி ஊழியர்ளை வேலையை விட்டு தூக்க போறிங்க.????????????

    ReplyDelete
    Replies
    1. PreKG வகுப்புகளாக, அங்கன்வாடி செயல்படும்.

      Delete
  4. அப்போ கூட புதுசா போஸ்டிங் போடமாடிங்க

    ReplyDelete
  5. தயவு செய்து TET தாள் 1 தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருப்பவர்களை, இந்த மழலையர் வகுப்புகளுக்கு தேவை படும் இடத்திற்கு போடவும் .

    ReplyDelete
  6. ஆசிரியர் பணியிடத்தை முடுச்சாச்சு,கணினி ஆசிரியர் வேலை வாய்ப்பை தொலைச்சாச்சு,மழலையர் கல்விக்காக பட்டப்படிப்பு முடித்தவர்களையும் ஓரங்கட்டியாச்சூ,அங்கன்வாடி பணியாளர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க இப்போ தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அங்கன்வாடியில் சென்று பாடம் நடத்துவது என்ற திட்டமிடலால் நிகழும் என்கின்ற எண்ணம்.

    ReplyDelete
  7. ஐயா paper 1 படித்து சும்மா இருக்கன் வேலை கொடுங்க
    Eligible for :D.ted.b.ed b.Lisc

    ReplyDelete
  8. ஐயா paper 1 படித்து சும்மா இருக்கன் வேலை கொடுங்க
    Eligible for :D.ted.b.ed b.Lisc

    ReplyDelete
  9. Poda puuuuu..... appa kuda tet p1 ku posting Poda maata apadithane. ....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி