அமைச்சர் செங்கோட்டையனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து! - kalviseithi

Oct 5, 2018

அமைச்சர் செங்கோட்டையனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து!தேசிய துாய்மை பள்ளி விருதுகள் பெற்ற, மாநிலங்கள் பட்டியலில், தமிழகம், இரண்டாம் இடம் பெற்றதற்கான சான்றிதழை, முதல்வர் பழனிசாமியிடம் அளித்து, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் வாழ்த்து பெற்றார்.

தேசிய அளவில், துாய்மை பள்ளி விருது பெற, கரூர் மாவட்டம், டி.செல்லாண்டிப்பாளையம், அரசு உயர்நிலைப் பள்ளி.தேனி மாவட்டம், கொம்பை தொழு, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி; சிவகங்கை மாவட்டம், எம்.ஆலம்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி; திருவள்ளூர் மாவட்டம், அரியப்பாக்கம், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியும் தேர்வு செய்யப்பட்டன. அதேபோல, திண்டுக்கல் மாவட்டம், இ.ஆவாரம்பட்டி, அரசு கே.ஆர்., உயர்நிலைப் பள்ளி; அரியலுார் மாவட்டம், சிலுவைசேரி, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியும் தேர்வாகின. இப்பள்ளிகளுக்கு, செப்., 18ல், டில்லியில் நடந்தவிழாவில், தேசிய அளவில் துாய்மை பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.

தேசிய துாய்மை பள்ளி விருதுகள் பெற்ற மாநிலங்கள் பட்டியலில், தமிழகம், இரண்டாம் இடம் பெற்றதற்கான சான்றிதழும் தரப்பட்டது. இவ்விருதுகளை, சென்னையில், நேற்று முன்தினம், முதல்வர் பழனிசாமியிடம் காண்பித்து, அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து பெற்றார். இத்துறைக்கு அமைச்சராக செங் கோட்டையன் பொறுப்பேற்றது முதல், பொது தேர்வில் ரேங்க் முறை ரத்து, பாடத்திட்டங்கள் சீரமைப்பு, போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் என, பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி