ஆசிரியர்களை நியமிக்காமல் வரும் ஆண்டுகளில் மேலும் பல புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் - மாணவர்கள் நிலை??? - kalviseithi

Oct 11, 2018

ஆசிரியர்களை நியமிக்காமல் வரும் ஆண்டுகளில் மேலும் பல புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் - மாணவர்கள் நிலை???


தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளிகளில் 3 ஆயிரத்து 689 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் கற்பித்தல் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்போது அதில் ஆசிரியர்களுக்கான ஊதியமும் அடக்கம். மேல்நிலைக்கல்வி (பிளஸ்1, பிளஸ்2) மாணவர்களை உருவாக்கும் அடிப்படை பணித்தொகுதி ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் எண்ணிக்கை சேகரிக்கப்படுகிறது. அதன்படி தற்போது காலியக உள்ள பணியிடங்கள் 1672, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் இடம் 600, 800 கணினி ஆசிரியர்கள், மகப்பேறு விடுப்பில் உள்ள 647 பேர் என சுமார் 3689 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இந்தப்பணியிடங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி துறையிடம் உள்ளது.

ஆயினும் அப்பணியிடங்களை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே நிரப்ப நடவடிக்கைஎடுக்காமல் 4 மாதம் முடிந்த நிலையில் ரூ.7500 தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 412 நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி கொடுப்பது,ஐஐடி, ஆடிட்டர் பயிற்சி போன்றவற்றிற்கு மாணவர்களை தயார் செய்ய உத்தரவிடப்படுகிறது. வெற்று விளம்பர அறிவிப்புகள் மாணவர்களுக்கு நல்லதல்ல. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுக்கு பிறகு வகுப்பு தொடங்கி ஒருவாரம் கடந்த பின்னரும் 2ம் தொகுதி வேதியியல், வரலாறு போன்ற புத்தகங்கள் வழங்கப்படவில்லை. பலமுறை வலியுறுத்தியும் ஆசிரியர் மாணவர் எண்ணிக்கையை கடைப்பிடிக்கவில்லை.

முக்கிய பாடங்களுக்கு தேவையான தனித்தனி ஆசிரியர்களை நியமிக்காமல் வரும் ஆண்டுகளில் மேலும் பல புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறுகின்றனர்.

13 comments:

 1. Manavarkal paavam thankal appa amma varumanam pathaamal arasu pallikku varukindragal anall arasu niruvagam yen ippiti inntha yelai manavargai kastapatuthu

  ReplyDelete
 2. Yellaien kovil arasu palli enpathai marakkatheeer pls EDU minister

  ReplyDelete
 3. Vacanta fill pannunga.amma irunthirunthal TRB vanthirukkum.

  ReplyDelete
 4. naadum nattu makkalum eppadi ponal enna?nalla padikkara children life close panragnga.nammal smart class vaikkararam...adhukku teachers venava? old is gold.without writing skill anyone can't make perfect themselves....god knows only this fake govt when dissolve?

  ReplyDelete
 5. விரைவில் அறிவிப்பு வர வேண்டும்

  ReplyDelete
 6. +1,+2 மாணவர்ககளின் நலன் கருதி PG முதுகலை ஆசிரியர் காலிபணியிடங்களை இந்த அரசு உடனடியாக PG TRB போட்டி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை

  ReplyDelete
 7. Computer science posting january 2018 la potruvom sonnar....amacharrr? Manavarakal nilai?

  ReplyDelete
 8. கல்வித்துறை காலாவதி துறையாக செயல்படுகிறது. Pg,vip சங்கம்

  ReplyDelete
 9. விரைவில் டென்சென் ஆக்கப்படும் pg.vip s

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி