பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பள்ளிகளில் உறுதிமொழி: ஆட்சியர் உத்தரவு - kalviseithi

Oct 11, 2018

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பள்ளிகளில் உறுதிமொழி: ஆட்சியர் உத்தரவு


குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமைக்குஎதிராக வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வாரத்தின் முதல் நாள் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டுள்ளார்

*நாட்டில் பெண்ணின் திருமண வயது 18 ஆகவும், ஆணின் திருமண வயது 21ஆகவும் வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்த வயதுக்கு கீழ் நடைபெறும் திருமணங்களை குழந்தைத் திருமணமாகும்

*தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்று வந்ததை அடுத்து, அதைத் தடுக்க2006-ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது

*இச்சட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக நல அலுவலர் தலைமையில் அதிகாரிகள் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்

*எனினும், இதுவரை குழந்தைத் திருமணங்கள் முழுமையாக தடுக்க முடியாமல் உள்ளது.வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 63 குழந்தைத்திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

*இதன்படி, இம்மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது

*இதன்தொடர்ச்சியாக, குழந்தைத் திருமணங்கள், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாவட்டத்திலுள்ளஅனைத்துப் பள்ளிகளும் வாரத்தின் முதல்நாள் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டுள்ளார்

*இதுதொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது

*வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளிடையே குழந்தைத் திருமணத் தடைச்சட்டம், பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டியது அவசியமாகிறது

*குழந்தைத் திருமணங்கள் இன்றளவும் பொது நிகழ்ச்சியாகவே கருதப்படுவதால் பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது

*எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் வாரந்தோறும் முதல் வேளை நாளின் காலை கூட்டத்தில் குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், உறுதிமொழி ஏற்கவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி