அரசு பள்ளி ஆசிரியர் பள்ளி கழிவறையினை சுத்தம் செய்யும் புகைப்படம் - சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2018

அரசு பள்ளி ஆசிரியர் பள்ளி கழிவறையினை சுத்தம் செய்யும் புகைப்படம் - சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது!


அரியலூா் மாவட்டம் விக்கிரமங்கலம்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஆசிாியா் சுவாமிநாதன் பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்த புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அரசு பள்ளி என்றாலே ஆசிாியா்கள் முறையாக பாடம் நடத்த மாட்டாா்கள், ஆசிாியா்கள் முறையாக வகுப்புக்கு வரமாட்டாா்கள். மாணவா்கள் மீது அக்கறையின்றி மிகவும் மெத்தனமாக செயல்படுவா் உள்ளிட்ட பல எதிா்மறை கருத்துகள் மக்கள் மனதில் நிலவி வருகிறது.இந்நிலையில் அரியலூா் மாவட்டத்தில் அரசுப்பள்ளிஆசிாியா் சுவாமி நாதன் பிற ஆசிாியா்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளாா். அரியலூா் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கணித ஆசிரியராக சுவாமி நாதன் பணியாற்றி வருகிறாா்.ஆசிரியர்கள் சம்பளத்திற்காக மட்டும் வேலைபார்ப்பவர்கள் அல்ல என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இவர்..காலாண்டு விடுமுறை…

கடந்த சில தினங்களுக்கு முன்னா் விடப்பட்ட கலாண்டு தோ்வு விடுமுறையில் பள்ளிக்கு சென்ற சுவாமி நாதன் மாணவா்களின் கழிவறை அசுத்தமாக இருப்பதை பாா்த்தி அதனை தாமே சுத்தம் செய்துள்ளாா். ஆசிாியா் கழிவறையை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

9 comments:

  1. கழிவறை யை சுத்தம் செய்ய போதிய ஆட்களை நியமிக்காத அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.அரசு போதிய அளவில் பணியாளர்களை நியமிக்க வேண்டும். மக்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் என்ற காரணம்.ஆசிரியர்கள் சுத்தம் செய்ய ஆட்களை நியமிக்கச் சொல்லுங்கள் நீங்கள் இப்படிச் செய்யாதீர்கள்! ஒருவருக்கு வேலை கிடைப்பதைத் தடுக்காதீர்கள்.

    ReplyDelete
  2. கழிவறை யை சுத்தம் செய்ய போதிய ஆட்களை நியமிக்காத அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.அரசு போதிய அளவில் பணியாளர்களை நியமிக்க வேண்டும். மக்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் என்ற காரணம் இப்பொழுது தெரிகிரதா?.ஆசிரியர்கள் சுத்தம் செய்ய ஆட்களை நியமிக்கச் சொல்லுங்கள் நீங்கள் இப்படிச் செய்யாதீர்கள்! ஒருவருக்கு வேலை கிடைப்பதைத் தடுக்காதீர்கள்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி