காலாண்டு தேர்வு விடைத்தாள் ஆய்வு-மதிப்பெண்ணில் வித்தியாசம் இருந்தால் நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2018

காலாண்டு தேர்வு விடைத்தாள் ஆய்வு-மதிப்பெண்ணில் வித்தியாசம் இருந்தால் நடவடிக்கை


மதுரையில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின்காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் ஆய்வு செய்யப்பட்டன.

முதற்கட்டமாக பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக 6 - 9ம் வகுப்புகளில் ஆசிரியர் திருத்திய விடைத்தாள்கள் நேற்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஓ.சி.பி.எம்., பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் தலைமை வகித்தார்.

304 பள்ளிகளில் இருந்து பாடங்கள் வாரியாக கொண்டு வரப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடைத்தாள் ஆய்வு செய்யப்பட்டன. 'தவறு மற்றும் மதிப்பெண் வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்படும்,' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment:

  1. மனசாட்சியுடனும் நீதியுடனும் நேர்மையான முறையிலும் தமிழக அரசு மற்றும் டி ஆர் பியும் நடந்தது கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பி.ஜு.டி.ஆர்பி தேர்வில் வேதியியல் பாடத்திற்கான வினாத்தாளில் 10 க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன இதனையடுத்து மதிப்பெண் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர் இதற்கான மதிப்பெண்களில் 6 ஆறு மதிப்பெண்கள் வழங்கி உத்தரவிட்டனர் மேலும் இதற்கான பணிநியமணங்களை செய்யாமல் டிஆர்பி கைவிட நிணைக்கிறது என்று கருதுகிறேன். நானும் ஒரு தனியார் பள்ளியில்தான் பணிபுரிந்து வருகிறேன் நான் நடத்திய தேர்வின் வினாத்தாளில் தவறாக வினாக்கள் கேட்கப்படும்போது அதற்கான மதிப்பெண்களை உடனடியாக வழங்கி விடுகிறேன். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் கேட்கப்படும் தவறான வினாக்களுக்கு மதிப்பீடு செய்யும்போது மதிப்பெண் வழங்கப்படும். இந்த தேர்வுக்கு மட்டும் ஏன் கோர்ட்டுக்கு சென்றதுதான் மதிப்பெண்களை பெறவேண்டியுள்ளது இதில் டிஆர்பி. வெளிப்படையாக நடந்தது கொள்ள வேண்டும் அனைத்து வேதியியல் தேர்வர்களுக்கும் 6 மதிப்பெண்களை வழங்கி இரண்டாவது சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நான் ஒரு மதிப்பெண் குறைவாக எடுத்ததால் என்னுடைய வேலை வாய்ப்பையும், எதிர்காலத்தையும் இழந்துள்ளேன். வேதியியல் பாடத்திற்கான வினாத்தாளில் இத்தனை வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன இதற்கான நீதி எங்கே. இதற்கான தீர்ப்பு எங்கே, தீர்வு எங்கே! பாதிக்கப்பட்டவன் நான்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி