சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் தனித் தேர்வர்களாக தேர்வு எழுத ஆன்லைன் மூலம் இன்று முதல் நவம்பர் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல் தொழில் கல்வி பாடங்ளுக்கான தேர்வுகளை பிப்ரவரியிலும், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகளை மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அதற்கான மாதிரி படிவங்கள், விவரங்களை தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் மற்றும் திரும்ப எழுத வேண்டிய அவசியம் உள்ள மாணவர்கள் 2019ம் ஆண்டு நடக்க இருக்கும் பொதுத் தேர்வில் தனித் தேர்வர்களாக தேர்வு எழுத விரும்பினால் இன்று தொடங்கி நவம்பர் 17ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க தவறும் மாணவர்கள் நவம்பர் 23ம் தேதி வரை அபராத கட்டணமாக 500 கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
அபராத காலத்துக்குள் விண்ணப்பிக்க தவறும் மாணவர்கள், நவம்பர் 30ம் தேதிவரை அபராத கட்டணமாக 1000 செலுத்தியும் விண்ணப்பிக்கலாம். அதற்கு பிறகும் கால நீட்டிப்பு டிசம்பர் 7ம் தேதி வரை செய்யப்படும். அதற்கான அபராத கட்டணம் 2000, இறுதி வாய்ப்பு டிசம்பர் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படும். அதற்கு 5000 ஆயிரம் வரை அபராத கட்டணம் செலுத்த வேண்டி வரும். தேர்வுக் கட்டணம் குறித்த விவரங்களை சிபிஎஸ்இ இணைய தளத்தில் மாணவர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். பார்வைத் திறனற்ற மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் இல்லை.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி