Flash News : அரசு பள்ளி Pre KG, LKG, UKG வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்-பள்ளிக் கல்வித்துறை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2018

Flash News : அரசு பள்ளி Pre KG, LKG, UKG வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்-பள்ளிக் கல்வித்துறை வெளியீடு!


அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட கேஜி வகுப்புக்களுக்கான பாட திட்டங்களை பள்ளிக் கல்வித்துறை வடிவமைத்துள்ளது.    

  நடப்பாண்டில் 32 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழியிலான மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ப்ரீ கேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித் துறை வடிவமைத்துள்ளது.

இந்த புதிய பாடத்திட்டங்கள் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதை பார்த்து, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள், வரும் 30ம் தேதிக்குள் கருத்துகளை பதிவு செய்யலாம் என அந்த துறையின் இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி மழலையர் வகுப்புகள் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. Please appointment in secondgrade tet pass candidates in kg classes dont waste of our time and students future

    ReplyDelete
    Replies
    1. மனசாட்சியுடனும் நீதியுடனும் நேர்மையான முறையிலும் தமிழக அரசு மற்றும் டி ஆர் பியும் நடந்தது கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பி.ஜு.டி.ஆர்பி தேர்வில் வேதியியல் பாடத்திற்கான வினாத்தாளில் 10 க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன இதனையடுத்து மதிப்பெண் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர் இதற்கான மதிப்பெண்களில் 6 ஆறு மதிப்பெண்கள் வழங்கி உத்தரவிட்டனர் மேலும் இதற்கான பணிநியமணங்களை செய்யாமல் டிஆர்பி கைவிட நிணைக்கிறது என்று கருதுகிறேன். நானும் ஒரு தனியார் பள்ளியில்தான் பணிபுரிந்து வருகிறேன் நான் நடத்திய தேர்வின் வினாத்தாளில் தவறாக வினாக்கள் கேட்கப்படும்போது அதற்கான மதிப்பெண்களை உடனடியாக வழங்கி விடுகிறேன். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் கேட்கப்படும் தவறான வினாக்களுக்கு மதிப்பீடு செய்யும்போது மதிப்பெண் வழங்கப்படும். இந்த தேர்வுக்கு மட்டும் ஏன் கோர்ட்டுக்கு சென்றதுதான் மதிப்பெண்களை பெறவேண்டியுள்ளது இதில் டிஆர்பி. வெளிப்படையாக நடந்தது கொள்ள வேண்டும் அனைத்து வேதியியல் தேர்வர்களுக்கும் 6 மதிப்பெண்களை வழங்கி இரண்டாவது சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நான் ஒரு மதிப்பெண் குறைவாக எடுத்ததால் என்னுடைய வேலை வாய்ப்பையும், எதிர்காலத்தையும் இழந்துள்ளேன். வேதியியல் பாடத்திற்கான வினாத்தாளில் இத்தனை வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன இதற்கான நீதி எங்கே. இதற்கான தீர்ப்பு எங்கே, தீர்வு எங்கே! பாதிக்கப்பட்டவன் நான்

      Delete
    2. Sir naanum 2 mark la miss pannidan sir.

      Delete
    3. Sir naanum 2 mark la miss pannidan sir.

      Delete
  2. TN govt must upgrade this in all schools to increase student strength & appoint TET passed second grade teachers. Don't give these extra 3 KG's classes to the existing teachers to handle this .
    Lots of TET passed persons r waiting a job?? Ple help them.

    ReplyDelete
  3. அரசுப்பள்ளியில் உலக பெண் குழந்தைகள் தினம்

    இன்று (11/10/2018, வியாழன்) மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் சுளிஒச்சான்பட்டி அரசு கள்ளா் உயா்நிலைப்பள்ளியில் உலக பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவிகள் கலை இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தினா் தலைமையாசிரியா் திரு நவநீதகிருஷ்ணன் விழாவிற்க்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினாா். சமூக அறிவியல் பாடஆசிரியா் திரு யோகராஜ் முன்னிலை.வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழக தலைவர் திரு.மகேஸ்வரன் நன்றி கூறினாா்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி