ப்ரிகேஜி (PRE KG) வகுப்புகளை மாலை 4 மணி வரை நீடிக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ப்ரிகேஜி வகுப்புகளை நடத்தி வரும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் மதியம் 1 மணி வரையே நடைபெறுகின்றன. இந்நிலையில் தமிழக கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு அரசுக்கு அளித்துள்ள வரைவு பரிந்துரையில், ப்ரீகேஜி வகுப்புகளை மாலை 4 மணி வரை நீடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் குழந்தைகளை சிறிது நேரம் தூங்க வைத்து அதன்பின் பாடங்களை தொடர்ந்து நடத்தி மாலை 4 மணிக்கு குழந்தைகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பரிந்துரைக்கு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே ஆதரவு மற்றும் எதிர்ப்பு கலந்து காணப்படுகிறது. மிகவும் இளம் வயதில் குழந்தைகள் மீது இவ்வாறு கல்விச் சுமையை ஏற்றுவது அவசியமற்றது என தமிழ்நாடு மாணவர்கள் ஆசிரியர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
மாலை 4 வரை ப்ரீகேஜி வகுப்புகளை நீடிப்பது குழந்தைகளின் உடல் நலத்தை பாதிக்கும் என பெற்றோர்களும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே நேரம் பணிக்கு செல்லும் பெற்றோர்களிடையே இந்த திட்டத்திற்கு வரவேற்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி