TNPSC - 'குரூப் - 1' தேர்வு முடிவு எப்போது? ஓர் ஆண்டாக தேர்வர்கள் காத்திருப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2018

TNPSC - 'குரூப் - 1' தேர்வு முடிவு எப்போது? ஓர் ஆண்டாக தேர்வர்கள் காத்திருப்பு!


துணை கலெக்டர் உள்ளிட்ட பதவிகளுக்கான, 'குரூப் - 1' தேர்வு நடத்தி, ஓராண்டு முடிந்தும், இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

தமிழக அரசு துறையில், 29 துணை கலெக்டர்கள், 34 டி.எஸ்.பி.,க்கள் மற்றும் வணிக வரி உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவி களில், 85 காலியிடங்களை நிரப்ப, குரூப்- 1 தேர்வு அறிவிக்கப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் - 1 முதல்நிலை தேர்வு, 2017, பிப்ரவரியில் நடத்தப்பட்டது. இதில், 1.38 லட்சம் பேர் பங்கேற்றனர்.தேர்வு முடிவுகள், ஆகஸ்டில் வெளியிடப்பட்டு, 4,602 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு, மெயின் தேர்வு என்ற பிரதான தேர்வு, 2017, அக்., 13 முதல், 15 வரை நடந்தது. தேர்வு முடிந்து, ஓராண்டாகியும், இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

'தேர்வு முடிவு, செப்டம்பர் கடைசி வாரம் வெளியிடப்படும்' என, தோராய தேதியையும், ஐந்து மாதங்களுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது. செப்டம்பர் முடிந்தும், இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. முடிவுகள் தயாராகி விட்ட நிலையில், அரசின் ஒப்புதலுக்காக, டி.என்.பி.எஸ்.சி., காத்திருப்பதாக, தகவல் கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து, தேர்வர்கள் கூறியதாவது:இந்த தேர்வின் முடிவு வந்த பின், தேர்ச்சி பெறுவோர் நேர்முக தேர்வில் பங்கேற்பதற்கும் பயிற்சி எடுக்க வேண்டும். அதேபோல, தேர்வு முடிவு தாமதமாவதால், வயது வரம்பு அதிகரித்து, வேலைவாய்ப்பு கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. எனவே, அரசின் தலையீடு எதுவும் இன்றி, தேர்வு முடிவை விரைந்து வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி