நான்கு துறைகளில் காலிப் பணியிடங்களைநிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு தேதிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இது குறித்து, டிஎன்பிஎஸ்சி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
சுற்றுலாப் பயணி அலுவலர் பணியில் காலியாக உள்ள 5 இடங்களுக்கு நடந்த தேர்வில் தற்காலிகமாக 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான நேர்முகத் தேர்வு நவம்பர் 2-இல் நடைபெறும். இதேபோன்று, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையாளர் பணியில் 3 இடங்கள்காலியாக உள்ளன. அதில், தற்காலிமாக ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நவம்பர் 11-இல் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் உள்ள 330 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் 665 பேர் தற்காலிமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு நேர்முகத் தேர்வு வரும் 25 முதல் நவம்பர் 1 வரை நடைபெறும்.இதே போன்று, வேளாண்மை விரிவாக்கப் பணிகள் தொகுதியில் அடங்கிய வேளாண்மை அலுவலர் பணியில் 323 இடங்கள் காலியாக இருந்தன. அவற்றுக்கு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்று 613 பேர் தற்காலிகமாகதேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 29 முதல் நவம்பர் 9 வரை நடக்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி