TRB - சிறப்பாசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் குளறுபடி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2018

TRB - சிறப்பாசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் குளறுபடி!


சிறப்பாசிரியர் தேர்வுப் பட்டியலில் ஓவியம், தையல் பாடப்பிரிவில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் அதிக மதிப்பெண் பெற்ற 300-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஹையர் கிரேடு தேர்வை தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் சமர்ப்பிக் கவில்லை என்று கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், குறைந்த மதிப்பெண் பெற்ற பலர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பட்டியலில் குளறுபடி

அரசு பள்ளிகளில் காலியாக வுள்ள 1,325 சிறப்பாசிரியர் (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்தஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத்தேர்வை நடத்தியது. எழுத்துத்தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) 5 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. எழுத்துத்தேர் வைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, கடந்த12-ம் தேதி இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.அதில், ஓவியம், தையல் சிறப்பாசிரியர் தேர்வுப் பட்டியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் எழுத்துத் தேர்வு மற்றும் பதிவுமூப்பு சேர்த்து அதிக மதிப்பெண் பெற்றிருந்த பலரின் பெயர் விடுபட்டு,அதற்குப் பதில் அவர்களைக் காட்டிலும் குறைவான மதிப்பெண்பெற்றவர்களின் பெயர் இடம் பெற்றிருந்தது.ஓவிய ஆசிரியர் பதவிக்கு எஸ்எஸ்எல்சி முடித்து ஓவிய பாடத்தில் டிடிசி எனப்படும் தொழில் ஆசிரியர் சான்றிதழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது நுண்கலை பட்டதாரி யாக (பிஎப்ஏ) இருக்க வேண்டும். அதேபோல், தையல் ஆசிரியர் பதவிக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சியும் தையல் பாடத்தில் டிடிசிதேர்ச்சியும் அடிப்படை கல்வித் தகுதிகள் ஆகும்.

ஓவியம் வரைய தமிழ்வழி சான்று?

இந்த நிலையில், அதிக மதிப்பெண் பெற்றும் தேர்வு பட்டியலில் பொதுப்பிரிவிலோ அல்லது தமிழ்வழி ஒதுக்கீட்டிலோ இடம்பெறாமல் பாதிக்கப்பட்ட தையல், ஓவியம் சிறப்பாசிரியர் தேர்வர்கள் சுமார் 300 பேர் கடந்த திங்கள்கிழமை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் விளக்கம் கேட்டனர்.தமிழ்வழி ஒதுக்கீட்டில் தங்க ளைக் காட்டிலும் குறைவான மதிப்பெண் பெற்றிருப்பர்கள் இடம்பெற்றிருப்பது குறித்து காரணம் கேட்டனர். அதற்குப் பதில் அளித்த ஆசிரியர் தேர்வுவாரிய அதிகாரிகள், ‘‘அடிப்படை கல்வித்தகுதி மற்றும் டிடிசி தகுதியை தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் வைத்திருக் கிறீர்கள். ஆனால், டிடிசிக்கு முந்தைய தேர்வான ஹையர் கிரேடு (ஓவியம் அல்லது தையல்) தேர்வுக்கு அதுபோன்று தமிழ்வழி சான்று வைக்காததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள்” என்று பதில் அளித்தனர்.

ஹையர் கிரேடு தேர்வை நடத்தும் அரசு தேர்வுத்துறை தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் வழங்குவது கிடையாது என்று அவர்கள் விளக்கிக் கூறியதை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கள் ஏற்கவில்லை. தேர்வர்களிட மிருந்து கோரிக்கைமனுக்களை மட்டும் பெற்றுக்கொண்டனர்.இதற்கிடையே, தமிழ்வழிச் சான்று பிரச்சினை தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், அரசு தேர் வுத் துறையானது, தொழில்நுட் பத் தேர்வுகளுக்கு தமிழ்வழியில் சான்றிதழ் வழங்குவதில்லைஎன்று ஆசிரியர் தேர்வு வாரியத் துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை தகவல் அனுப்பியது.

அதிக மதிப்பெண்

தொழில்நுட்பத்தேர்வை நடத் திய அரசு தேர்வுத்துறையே தமிழ்வழியில் சான்றிதழ் வழங்க இயலாது என்று பலமுறை விளக்கம் அளித்துவிட்டதால், அதிகமதிப்பெண் பெற்றும் தேர்வுப் பட்டி யலில் இடம்பெறாத தையல், ஓவியம் சிறப்பாசிரியர் தேர்வர் கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர்.

ஓவியம், தையல் ஹையர் கிரேடு தேர்வுக்கு தமிழ்வழியில் சான்றிதழ் வழங்கப்படாததால் எஸ்எஸ்எல்சி, டிடிசி கல்வித்தகுதி களுக்கானதமிழ்வழி சான்றிதழ்கள் அடிப்படையில் திருத்தப்பட்டபுதிய தேர்வுப் பட்டியல் வெளியிடப் பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழ்வழி சான்றிதழ் சர்ச்சையால் பாதிக்கப்பட்ட தேர் வர்கள் தற்போது நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட் டுள்ளது.

தேர்வு வாரியம் விளக்கம்

இந்தப் பிரச்சினை குறித்து ஆசிரியர் தேர்வுவாரியத்தின் உறுப்பினரும், சிறப்பாசிரியர் தேர்வுப் பட்டியல் தயாரிப்பு பொறுப்பு அலுவலருமான தங்க மாரியிடம் கேட்டபோது, “ஹையர் கிரேடு தேர்வுக்கு தமிழ்வழியில் சான்றிதழ் தர இயலாது என்று அத்தேர்வை நடத்திய அரசு தேர்வுத்துறை கூறியிருக்கலாம். ஆனால், தேர்வர்கள் தாங்கள் படித்த தனியார் பயிற்சி மையத் திலிருந்து தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் பெற்று சமர்ப் பித்திருக்கலாமே. அதுபோன்று பல தேர்வர்கள் தமிழ்வழி சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்” என்றார்.

17 comments:

  1. உங்களுக்கு கிடைத்திருந்தால் Trb ரொம்பசரியாக நடக்கிறது
    என்பீர்கள்.உங்களுக்கு வரலனா குளறுபடியா??? 😱😱😱😱😱😱

    ReplyDelete
  2. தமிழக அரசாங்கத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பயிற்சி மையங்கள் எவை எவை? அங்கு தரப்படும் சான்றிதழ்கள் யாவும் உண்மையானதாக இருக்கும் என்று அரசு ஏற்றுக்கொள்கிதா ?
    ,

    ReplyDelete
    Replies
    1. TN govt given approval to give coaching for drawing, tailoring.
      Ex: Reg.no for Coaching centre.
      Ajantha school of arts. Chennai.& velai vaaippu payirchi maiyam at Caudalore.

      Delete
  3. Tamil vazhi odhukeedu enbadhu muttaalthanamana ondru.engaluku mudhalileye sollirundhal naangalum tamil medium padichiruppome.english medium pasangalukkum tamil medium posting potal urupuduma?

    ReplyDelete
  4. TET/TNPSC :NEW SYLLABUS STUDY MATERIALS AVAILABLE in SIMPLE and UNDERSTANDABLE method.QUESTION BANK also AVAILABLE for NEW SYLLABUS.
    BUY IMMEDIATELY

    ReplyDelete
  5. Special teachers sewing teachrs any changes irukka please yarrvathu information thanga selection list varruma

    ReplyDelete
  6. tamil medium cettificate the principal or registar or head of institution any one issue but he refer tc,or mark statment or content of topic he reffer any one ofter issue pstm certificate he tick any one colum tc,mark sheet or content of topic trb cheque or not cheqe this colum during cv.

    ReplyDelete
  7. தமிழ் வழி சான்றிதழ் வழங்கும் போது கல்வி நிறுவன தலைவர் அல்லது முதல்வர் அல்லது பதிவாளர் மதிப்பெண் சான்றிதழ் அல்லது மாற்றுசான்றிதழ் அல்லது பாட பொருள் ஆகியவற்றை சரிபார்த்தேன் என்று ஏதேனும் ஒரு சான்றிதழை சரிபார்த்து அதன் அடிப்படையில் தான் PSTM வழங்கவேண்டும்.அந்த களத்தை அவர்கள் தெரிவுசெய்யவேண்டும் .any one sapoting certificate how to issue pstm in private institution trb cheqe or not

    ReplyDelete
  8. In drawing and tailoring Head of the institution's to check the CONTENT. It is not in the marks certificates.This is like that UG and PG convocation certificates.

    ReplyDelete
    Replies
    1. i don't know drowling& other,that is physicl education b.p.ed course

      Delete
  9. pet ku reserved place ku again list viduvangala.anybody pls reply me

    ReplyDelete
  10. ஓவியத்தில் தமிழ்வழி englishவழி என்று இருக்கிறதா

    ReplyDelete
  11. Enter your comment...எப்படி சிக்கல் ஏற்படுத்தி ஏமாற்றலாம் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள் trb

    ReplyDelete
  12. தமிழக அரசு நடத்திய தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு பளளிகளில் சிறப்பாசிரியர் பணி நியமனத்திற்காக அக்டோபர் 23, 2021 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு TRB அலுவலகத்தில் சரி பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை பணி வழங்கப் பட வில்லை. எனவே தமிழக அரசு இந்த சிறப்பாசிரியர் பணி ஆணையை உரிய நேரத்தில் வழங்குமாறு தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி