TRB - சிறப்பாசிரியர் நியமனங்களில், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2018

TRB - சிறப்பாசிரியர் நியமனங்களில், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு!


சிறப்பாசிரியர் நியமனங்களில், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள, 1,325 சிறப்பாசிரியர் இடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., வழியாக, 2017, நவம்பரில், தேர்வு நடத்தப்பட்டது.

மூன்று மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த நிலையில், 10 நாட்களுக்கு முன், தேர்வு முடிவு வெளியானது.இதில், பல தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடிகள் நடந்துள்ளதாக பிரச்னை எழுந்தது. அதிருப்தி அடைந்த தேர்வர்கள், ஒரு வாரத்திற்கு முன், சென்னையில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகம் முன், போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும், முதல்வரின் தனி பிரிவுக்கும், கலை ஆசிரியர் நல சங்க தலைவர், ராஜ்குமார் மனு அளித்திருந்தார்

. மனுவில், 'தையல், ஓவியம் ஆகிய பாடப் பிரிவுகளில், பல தேர்வர்கள் தவறான சான்றிதழ்களை காட்டி, பணி நியமன உத்தரவு பெற்றுள்ளனர்; எனவே, மீண்டும் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும்' என, கோரியிருந்தார்.இது குறித்து, டி.ஆர்.பி., துணை இயக்குனர் கையெழுத்திட்ட கடிதம், மனுதாரருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தாலும், மீண்டும் அவர்களின் சான்றிதழ் படிவம் மற்றும் ஆவணங்கள் சரிபார்த்த பிறகே, நியமனம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படும்' என, கூறப்பட்டுள்ளது.

அதேபோல, அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறாதோரிடம், டி.ஆர்.பி., தரப்பில், கடிதங்கள் பெறும் பணியும் துவங்கியுள்ளது.

19 comments:

  1. TET/TNPSC VENKATESWARA MATERIALS:
    BASED ON NEW SYLLABUS.ADDITIONAL INFORMATION ADDED .QUESTION BANK AVAILABLE.PREPARED BY EXPERTS.
    CONTACT: 9384375868

    ReplyDelete
  2. Pgtrb December la kandippa callfor nnu sollikirangalaeeeeee..????????

    ReplyDelete
  3. சார் 1:5 என்ற விகிதப் படி நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. 1:2 க்கே விடை தெரியல இதுல 1:5 ன்னா நீங்க கண்டிப்பா எடப்பாடி அரசின் சிறந்த ஆலோசகராக இருக்க வேண்டியவர்

      Delete
  4. நடப்பாண்டு வரையுள்ள பணியிடங்களை நிரப்பினால் நன்று. பரிசீலனை செய்யுமா அரசு

    ReplyDelete
  5. kalvisethi editor avargalukku, sethigalin unmaithanmai arinthu seithigalai pathividavum trb marupadiyum c.v eandru sollavillai. please call trb office.

    ReplyDelete
  6. TRB, CV நடத்தப்போவதில்லை. தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை அறியப்போகிறார்கள். எகா: தமிழ்வழி பயின்றோர் சமர்ப்பித்தவை

    ReplyDelete
  7. higher grade க்கு தமிழ்வழி certificate எப்படி வாங்குவது?

    ReplyDelete
  8. மதிப்பிற்குரிய ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சிறப்பாசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பில் நடந்துள்ள குளறுபடிகள் குறித்து நன்கு பரிசீலனை செய்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இரவு பத்து மணிக்கு மேலாகியும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்களின் சான்றிதழ் களை சரிவர கவனிக்காமல் அதற்கும் மேல் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களிடம் விவரங்கள் கேட்டு அறிவோம்.என்ற கூற்றுக்கு இணங்கி ஒவ்வொரு வரும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டுள்ளார் கள். இந்நிலையில் ஓவியம் பிரிவில் higher greade Free hand out line model drawing தமிழ் வழி சான்றிதழ் குறித்து எந்த மாவட்டத்திலும் யாரிடமும் கேட்கவே இல்லை.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் கூட higher greade drawing free hand model drawing இவற்றிற்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடாத பட்சத்தில் தற்போது அதுவும் பெற்று இருக்க வேண்டும் என்று கூறுவது தகுதி வாய்ந்த நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி நியமன ஆணைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.ஆனால் அதை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முன்னிலையிலே தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தேர்வர்களை அழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி ஒருவர் கூட பாதிப்பு அடையாதவண்ணம் செயல் படுவதே ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலையாய கடமையாகும்.மேலும் தற்போது வெளியிடப் பட்டுள்ள தற்காலிக பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒருவருக்கும் அது எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை. எந்தவொரு ஒரு காரணத்தாலும் தகுதிவாய்ந்த நபர்கள் ஒருவர் கூட பாதிப்பு அடையாத வண்ணம் செயல் பட வேண்டியது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் மீதுள்ள கட்டாய கடமையாகும்.ஒரு போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க துவங்கியது முதல் பணி நியமன ஆணை பெரும் வரை ஒரு தேர்வர் அடையும் இண்ணல் களை வார்த்தை களால்சொல்லி மாலாது. ஆகையால் காலதாமதமாக செயல் பட்டாலும் அனைவர்க்கும் மறு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்டவரை நீதி மன்றத்தை நாடும் நிலையில் தள்ளி மனவுழச்சலக்கு ஆளாக்குவது மிகவும் தவறான செயல். ஆகவே இது தேரவர்களிதே ஒட்டுமொத்த பிரச்சினை யாக உள்ள காரணத்தால் அனைத்து தகுதிவாய்ந்த நபர்கள் 1:2 பட்டியலில் உள்ள வர்களுக்கு மறு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மாண் பை காக்க வேண்டும் என்பதே தேற்சி பெற்றவர்களின் ஒட்டுமொத்த கருத்து.

    ReplyDelete
  9. இது முற்றிலும் உண்மை சிந்தித்க வேண்டிய கருத்து ஏனென்றால் தயவு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குறிப்பானையை எடுத்து படித்துப் பாருங்கள் அதில் எந்த இடத்திலும் ஓவியம் பிரிவில் free hand out line model drawing தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று கேட்கவே இல்லை. தமிழில் கூட ஓவிய ஆசிரியர் பணி க்கு வரையற்ற ஓவியமும் மாதிரி ஓவியமும் என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று கேட்கவே இல்லை.

    ReplyDelete
  10. உன்மையான தகவலை மேலே சுட்டிக்காட்டியுள்ளார் அவருக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்களின் பணிவான வேண்டுகோள்.உன்மையை உரக்கச் சொல்லுங்கள் தனியார் நிறுவனங்கள் நடத்தி வரும் பயிற்சி யில் பயின்று பெறப்பட்ட தமிழ் வழி சான்றிதழ் ஏற்றுக்கொள்ள ப்படும் என்று குறிப்பானையில் குறிப்பிடவேண்டும் இல்லை. இப்போது சிறப்பாசிரியர் பிரிவில் கவனிக்க நியமிக்கப்பட்ட செயல் தலைவர் தங்க மாரி அவர்கள் கறிப்பிடுகையில் தனியார் நிறுவனங்கள் மூலம் தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க தாமே என்று கூறுவது ஏற்புடையது அல்ல இதற்கு ஒரே தீர்வு அனைவர்க்கும் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதே.

    ReplyDelete
  11. இது ஏற்கவேண்டிய ஆலோசனை ஏனெனில் ஏற்கனவே சிறப்பாசிரியர் நியமனத்தில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டினால் கண்டிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  12. சிறப்பாசிரியர் நியமனம் செய்வதற்கு என போடப்பட்டுள்ள GO NO: 185 இல் உள்ளவாறு 1:5என்ற விகிதம் தான் சரியான தேர்வாக இருக்கும் இந்த GO வை வைத்து தான் தேர்வு நடைபெற்று இருக்க வேண்டும் எனவே இதை பின்பற்றவேண்டும் அப்போது தான் அனைத்து தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியனவுகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    ReplyDelete
  13. சிரிப்பாய் சிரிக்குது சிரப்பாசிரியர் நியமனம். இந்த அரசிடம் எதிலும் நீதி.நேர்மை.உண்மை.வெளிப்படை தன்மை.எதுவுமே கிடையாது.அனைத்திலுமே முறைகேடு என்றால் எதற்காக இப்படி ஒரு தேர்வு பழையபடி பதிவு மூப்பு அடிப்படையிலாவது பணி வழங்க லாமே ஏனிந்த நிலை எப்போது படித்தவர்கள் நிலை மாறுமோ?

    ReplyDelete

  14. The consortium of universities of medical engineering and dentistry (COMEDK) is carrying out the COMEDK 2019. The last date to request UGET will be in the month of January. COMEDK UGET is a computer-based test for admission to several engineering universities with more than 20,000 seats in Karnataka that are part of the consortium.
    To Read More click Here

    ReplyDelete
  15. Thirumpa certificate sariseythAl ventum

    ReplyDelete
  16. jee mains january 2020 | National Testing Agency is going to conduct the JEE Main 2020 Examination in a similar fashion as it conducted JEE Main 2019. Joint Entrance Examination is conducted for candidates to apply for admission in IITs, NITs, IIITs, and GFTIs. JEE Main Exam will be conducted twice every year by NTA .know more about JEE Main 2020

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி