இன்று (12.11.2018) அனைத்து பள்ளி, அரசு அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்க விட அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2018

இன்று (12.11.2018) அனைத்து பள்ளி, அரசு அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்க விட அரசு உத்தரவு


மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவைத்தொடர்ந்துநாடு முழுவதும் அரைக்கம்பத்தில் பறக்க விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில்ஒருவருமான அனந்தகுமார் (வயது 59) இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அனந்தகுமார் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அனந்த குமார் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தார்.

மத்திய இரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சராக இருந்த அனந்தகுமார் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.அனந்தகுமார் மறைவைத்தொடர்ந்து கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை விடப்படுவதாக அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார். மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் இன்று தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முழு அரசு மரியாதையுடன் அனந்தகுமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி